செவிலியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!! தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உயிர்காக்கும் மருத்துவ துறையில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தேவையான ஊதியம்கூட வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த, மத்திய அரசு ஆணையிட்டும் அதை மாநில அரசுகள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது. செவிலியர்களின் பணி மகத்தானது. சொந்த சோகங்களை மறைத்து புன்னகையுடன் பணி செய்வது உள்ளிட்டவை செவிலியர்களின் தியாகங்கள் அளவிட முடியாதது என்றார். ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மிக மிகக் குறைவு. மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகி