வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒருவர் நோயினால் பாதிக்கப்பட்டால் அவரை ஒரு தகுதிவாய்ந்த செவிலியர் பரிசோதனை செய்து அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கும் சுதந்திர செவிலியர் தொழில்முறை (Independent Nurse Practitioner) உள்ளது. ஆனால் வளர்ந்த நாடுகளின் உள்ள தொழில்நுட்பம், உட்கட்டமைப்பை இந்தியாவில் புகுத்த நினைக்கும் இந்திய அரசாங்கம் செவிலியர்கள் மட்டும் எந்த வகையிலும் சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையில் முன்னேறி விடக்கூடாது என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனையே தாரக மந்திரமாக கொண்டு சுகாதார அமைப்புகளான மருத்துவ கவுன்சில் (MCI), செவிலியர் கவுன்சில் (INC), மற்றும் சுகாதார அமைச்சகமும் (MOHFW) செவிலியர்களின் அடிப்படை உரிமையான சுதந்திர செவிலிய தொழில்முறையை (Independent Nurse Practioner) நடைமுறைப்படுத்த முட்டுக்கட்டைகள் போட்டு வருகின்றன. இந்திய செவிலியர் கவுன்சில் தற்போது அறிமுகப்படுத்திய Nurse Practitioner Course எனும் Post Graduate Nursing படிப்பை கூட ஒரு சார்பு படிப்பாக அறிமுகப்படுத்தியதே தவிர Independent Nu