சார் வணக்கம், என் பெயர் _______, நான் 2015 இல் XXXX_ அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பொழுது மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தேன் இன்றுவரை எனது மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படவில்லை நான் 2017 இல் XXXX_ அரசு மருத்துவமனையில் இருந்து YYYY அரசு மருத்துவமனைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டேன். தற்போது இங்கு பணிபுரிந்து வருகிறேன். இங்கு எனது பழைய மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என கூறுகின்றனர். XXXX மாவட்டத்தில் உங்களுடைய மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும், அந்த ஊதியத்தினை நீங்கள் தற்போது பணிபுரியும் மருத்துவமனையிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் நன்றி. அம்மா வணக்கம் இன்றுவரை MRB மூலம் பணியமர்த்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு பிரசவம் பார்த்து வரும் MRB ஒப்பந்த செவிலியர்களுக்கு, மகப்பேறு விடுப்புக்கான ஊதிய சட்டம் இருந்த போதிலும் மகப்பேறு விடுப்பு கூட (ஊதியம் பற்றி கூறவில்லை) அளிப்பது இல்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் இருந்து, நிரந்தர அடிப்படையி