மகப்பேறு விடுப்பு 1.7.2021 முதல் 1 ஆண்டாக உயர்த்தி அரசாணை வெளியீடு. 1.7.2021 க்கு முன்னதாக மகப்பேறு விடுப்பில் உள்ளவர்களும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 9 மாதத்திற்கு பதிலாக ஓராண்டு அதாவது 365 வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். Click here to Download the 365 Days Maternity Leave Government Order வணக்கம் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு இதற்கான அரசாணை வந்துள்ளது அனைவருக்கும் எழுந்துள்ள கேள்வி என்னவெனில் நான் தற்போது மகப்பேறு விடுப்பில் உள்ளேன் எனக்கு இந்த 365 நாட்கள் உண்டா இல்லையா என்பதுதான். பொதுவாக அரசாணைகளை இரண்டாகப் பிரிக்கலாம் 1)வெளிவந்த நாள் முதல் செல்லுபடியாகும் அரசாணை. 2)முன்னர் தேதியிட்ட நாளிலிருந்தே செல்லுபடியாகும் அரசாணை ஆகிய இரண்டு வகை ஆகும். தற்போது வெளியாகி உள்ள அரசாணை 1-7-2021 முதல் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாணையின் அதே பகுதியிலேயே இந்த அரசாணை 1-7-2021 க்கு முன்னர் மகப்பேறு விடுப்பில் இருக்கும் ஊழியர்களும் இந்த 365 நாட்கள் மகப்பேறு விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் தற்போது மகப்பேறு விடுப்பில் இருப்பவர்