மருத்துவமனை பணியாளர்களை நியமிப்பதற்கான கொள்கையை அரசு 2012 ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளது

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணை (G.O. Ms No. 325, நாள்: 20.11.2012)

இந்த அரசாணையின் முக்கிய அம்சம், மருத்துவமனை பணியாளர் (Hospital Worker), தூய்மைப் பணியாளர் (Sanitary Worker) மற்றும் இரண்டாம் நிலை செவிலியர் உதவியாளர் (Nursing Assistant Grade II) ஆகிய பணியிடங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இனி இவை அனைத்தும் 'பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்' (Multipurpose Hospital Worker) என்ற ஒரே பெயரில் அழைக்கப்படும்.

200 படுக்கைகளுக்கு மேல் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் பெரிய தாலுகா மருத்துவமனைகளில், காலியாக உள்ள தூய்மைப் மற்றும் மருத்துவமனை பணியாளர் இடங்களுக்கு வெளியிலிருந்து (Outsourcing) சேவைகள் பெறப்படும். அதே சமயம், 200 படுக்கைகளுக்கு குறைவாக உள்ள தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற பணிகளுக்கு பழைய முறையிலேயே சொந்தப் பணியாளர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள்.

காலியாக உள்ள இரண்டாம் நிலை செவிலியர் உதவியாளர் பணியிடங்கள், ஏற்கனவே உள்ள மருத்துவமனை பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் நிரப்பப்படும். மேலும் இவர்களுக்கான ஓய்வு பெறும் வயது 60 ஆக தொடர்ந்து நீடிக்கும். 200 படுக்கைகளுக்கும் குறைவான மருத்துவமனைகளில் ஏற்படும் மற்ற காலியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியர் நிர்ணயிக்கும் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். இந்த ஒப்பந்தம் தொடக்கத்தில் ஒரு வருடத்திற்கு வழங்கப்படும், பின்னர் பணியாளரின் செயல்பாட்டைப் பொறுத்து 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்