தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் (அரசு அங்கீகாரம் பெற்றது) மாநில சங்க தேர்தல் அறிவிப்பு.

Tamilnadu Government Nurses Association (Government Recognized)

Date of filing Nomination : 05.05.2017

Last Date of filing Nomination : 11.05.2017

Invalidation of candidates : 15.05.2017

Withdrawal of Nomination : 19.05.2017

Despatch of Ballot papers to association Members: 02.06.2017

Members Returning the ballot papper to Election officer : 09.06.2017

Opening of polled votes : 10.06.2017

Election Results : 12.06.2017

Check our website for TGNA Election Related news. 

தமிழ்நாடு அரசு செவிலியர்களின் 7 வது ஊதியக் குழு கருத்தரங்கம்
செவிலியர் மன்றம் மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு அரசு செவிலியர்களின் 7 வது ஊதியக் குழு கருத்தரங்கம் திருச்சி, அருண் மினி ஹாலில் 10-04-2017 அன்று காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை நடைபெற்றது.


இதில் ஒப்பந்த செவிலியர்கள் படும் இன்னல்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், ஒப்பந்த காலத்தை பணிக்காலத்துடன் இணைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது.


மேலும் 6 வது ஊதிய குழுவில் நாம் இழந்தது, அரசு இரவு 9 மணிவரை நம்மை இழுத்தடித்தது, அதன்பிறகும் ₹.250/- மற்றும் ₹.500/- படி வழங்கியது பற்றியும் பேசப்பட்டது.


மருத்துவமனையில் செவிலியரின் பணியும் மற்ற மருத்துவ துறை நண்பர்களின் பணியும் ஒன்றல்ல, செவிலியர்கள் படும் இன்னல்கள், நேரடி தாக்குதல், பொறுப்புகள் போன்றவை விளக்கப்பட்டது.


மத்திய அரசு செவிலியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம், அதனால் அவர்கள் பெற்ற பலன் பற்றி பேசப்பட்டது.


தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைத்த குழு அளித்த பரிந்துரைப்படி ஊதியம் மற்றும் சலுகைகள் பெற நடவடிக்கை எடுக்க பேசப்பட்டது.


அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தி, 7-வது ஊதியக் குழுவில் செவிலியர்களுக்கு முறையான ஊதியம் பெற அனைத்து செவிலியர்களையும் தயார்படுத்த தீர்மானம் இயற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்.

*இதுபோன்று வேறு மாற்றம் இருந்தால் நீங்கள் தயைகூர்ந்து Comment இல் கூறவும்*

மாற்றம் ஏற்படுத்த விரும்பும் யாரேனும் ஒருவருக்கு உதவலாம்.


*மேலவை*
சங்கத்தில் மேலவை அமைக்கப்பட வேண்டும், அதில் செவிலிய துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் மேலவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும், மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள், ஆனால் மேலவை நிலையானது. கலைக்க இயலாலதாக இருக்க வேண்டும். சங்கம் தற்போது போல முடக்குநிலை ஏற்படும் போது மேலவை முழு சக்தி பெற்று இயங்க வேண்டும்.
*த.அ.ந.ச.கூட்டுறவு & வீட்டு வசதி வாரிய அமைப்பு*

சங்க கட்டிடம் சென்னை புறநகரில் (பெருங்களத்தூர் / வண்டலூர்) போன்ற இடங்களில் திருமண மண்டபமாக கட்ட வேண்டும். இம்மண்டபம் பொதுமக்கள், செவிலியர்கள், சங்க கூட்டங்களுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு விட வேண்டும்.

மாவட்டம் தோறும் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும்,

இதற்கு பொறுப்பாக ஒரு நேர்மையான, கையாடல் செய்யாத அறங்காவலர் குழு அமைக்க வேண்டும்.

அக்குழு நிதி திரட்டி, கூட்டுறவு சங்கத்தில் சேமித்து, இச்செயலை செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட தொகைக்கு மேல் இந்த அமைப்பில் முதலீடு செய்பவர்களுக்கு வாரிய அமைப்பு இலாபத்தில் பங்கு அளிக்க வேண்டும்.
*த.ந.அ.ச. நிரந்தர,சுதந்திர தேர்தல் ஆணையம்*

சங்கத்திற்கு நிரந்தர, சுதந்திர தேர்தல் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதில் ஒரு ஆசிரியர், ஒரு முன்னாள் அரசு துறை சங்க தலைவர் / செயலாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இது உறுப்பினர் சேர்க்கையை செய்து, ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை உறுப்பினர் / வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

ஒப்வொரு மாவட்டத்திலும் உள்ள கிளைச்சங்கத்திற்கு தேர்தல் அறிவித்து, நடத்திட வேண்டு.
*கலை, இலக்கிய, விளையாட்டு அமைப்பு*

சங்கத்தில் கலை, இலக்கிய, விளையாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை விழா நடத்தப்பட வேண்டும்.

இதன்மூலம் பணி மட்டுமே செய்து மன்ச்சோர்வு, Depression பெறும் செவிலியர் எண்ணிக்கை குறையும்.
*குறை தீர்ப்பு (ம) விளக்க மையம்*

சங்கத்திற்கு பணி நேரத்தில் குறை தீர்ப்பு WhatsApp மையம் திறக்கப்பட வேண்டும்.

செவிலியர்களின் குறைகளுக்கு சங்கம் அரசாணை, ஆவணங்களின் உதவியுடன் தீர்வு கூற வேண்டும்.

தீர்வு இல்லாத பட்சத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றறிக்கை, அரசாணை பெற வேண்டும்.
*தனி நிலை விதி மாற்றம்*

சங்கத்தின் தனிநிலை விதி (BY LAW) பழமையாக உள்ளது,

அதனை ஒரு சரியான குழு அமைத்து, திருத்தி, பெரும்பான்மை உறுப்பினர்களின் முன்னிலையில் சமர்ப்பித்து, ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
*அரசு செவிலியர் குரல் மாத இதழ்*

சங்க செயல்பாடுகளை கடைக்கோடி செவிலியரும் அரியும் வண்ணம் சங்க மாத இதழ் வெளியிடப்பட வேண்டும்.

அதற்கு தனி சந்தா வசூலிக்கப்பட்டு, அவ்வப்போதைய நிகழ்வுகளை வெளியிட வேண்டும்.

இதழில் செவிலியர்களின் பங்களிப்பினை உறுதி செய்ய, மாதம் ஒரு மாவட்டத்திற்கு இதழ் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும்.

சிறப்பாக இதழ் தயாரித்த மாவட்டத்திற்கு பரிசு வழங்க வேண்டும்.
*அடையாள அட்டை*

சங்க உ

சங்க உறுப்பினர் என்பதன் அடையாளம் தற்போது சந்தா கட்டிய இரசீது தான் என்ற நிலை உள்ளது.

சங்கத்திற்கு என்று தனி அடையாள அட்டை வடிவமைக்கப்பட்டு உறுப்பினராக இணையும் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

சந்தா கட்டாத உறுப்பினர்களின் விவரம் தெரிவிக்கப்பட்டு அவர்களின் உறுப்பினர் அட்டை செல்லாததாக அறிவிக்கப்பட வேண்டும்.
*தேர்தல் முறை மாற்றம்*

தற்போதுள்ள நேரடி மாநில சங்க நிர்வாகி முறை மாற்றப்பட்டு,

 மாவட்ட சங்க பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவரை மாநில பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க தனி நிலை விதி (BY LAW) இல் மாற்றம் செய்யப் பட வேண்டும்.
*சங்கப் பதிவு*

த.நா.அ.ந. சங்க பதிவு காலாவதியாகிவிட்டது அதனை தண்டம் (Penalty) கட்டி புதுப்பித்து சங்க சான்று பெற வேண்டும்.

மேலும் அரசு அங்கீகார அரசாணையும் யாரிடமும் இல்லை.

இனிவரும் சங்க நிர்வாகிகள் தகவல் அறியும் சட்டம் மூலம் அதனை பெற்று  பாதுகாக்க வேண்டும்.
*தேசிய / மாநில விருதுகள் பரிந்துரை அமைப்பு*

செவிலிய துறையில் ஏமாற்றாமல் பணி செய்யும் பல செவிலியர்கள் உள்ளனர், அவர்களை அடையாளம் கண்டு, தேசிய / மாநில சிறந்த செவிலியர் விருதுகளை பெற (செவிலிய பணி அல்லாத சில பணிகளை அவர்கள் செய்திருக்க வேண்டும் உ.த புத்தகம் எழுதுதல்) தயார் செய்து அவர்களை பரிந்துரை செய்ய வேண்டும்.

கூட்டுறவு நாணய சங்கம் தொடங்க வேண்டும்.

பணியின் போது இறக்க நேரிடும் செவிலிய குடும்பத்திற்கு சங்கம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை Group Insurance Policy உருவாக்கி  வழங்க  செய்யலாம்.

சங்கம் சரியான பாதையில் சென்றிருந்தால் இன்னும் பல சாதனைகளை செய்து இருக்கலாம்,

மாற்றம் நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

நன்றி

"செவிலியர் குரல்"

அரசு  மருத்துவமனைகளில்  அரசுப்பணி சுகாதார  பணியாளர்கள்  குறைவு .


தனியார்  நிறுவனம்  ஒன்று  புற ஆதார  அடிப்படையில்  பணி செய்கின்றது .


அந்த  நிறுவனத்தின்  கீழ்  ஒவ்வொரு  மருத்துவமனையிலும்  பணியாளர்கள் ,கண்காணிப்பாளர்கள் , மேலாளர்  ஆகியோர்  நியமனம்    செய்யப்பட்டுள்ளனர்அ, வர்கள் 3  ஷிப்டாக  பணியில்  உள்ளனர், புற ஆதார ஊழியர்களின் வருகை  பதிவேட்டை  பராமரிப்பதும்  அவர்களே,    கழிவறை ,வார்டை  சுத்தம்  செய்வது  மட்டுமே  எங்கள் வேலை  மற்ற வேலைகள்  செய்ய மாட்டோம் . என்கிறார்கள் .


ஒரு வார்டு  என்று  எடுத்து கொண்டால்  குறைந்தது  20  நோயாளிகள்   இருப்பர் . சில  விதிவிலக்குகள்  உண்டு  50  க்கும் மேல் இருப்பர் .


ஒரு  நோயாளி  அனுமதிக்க  பட்ட உடன்  அவருக்கு  ரத்தப்பரிசோதனை , X - Ray, ஸ்கேன்  சிறப்பு மருத்துவர்களின்  கருத்துரு, மயக்க  மருத்துவரின் ஒப்புதல், என  பல்வேறு இடங்களுக்கு  அழைத்து  செல்ல வேண்டும்.


மருத்துவமனை  பணியாளரோ  6  வார்டிற்கும்  சேர்த்து ஒருவர்  இருப்பார் .
அவர்  எப்படி 100  க்கும் மேற்பட்ட  நோயாளிகளை  அழைத்து செல்ல  முடியும் .


பரிசோதனைகள்  முடிக்கவில்லை  என்றால்  செவிலியர்கள் மருத்துவரின் கோபத்திற்கு  உள்ளாக  நேரிடும் .


நோயாளியின் உறவினரை  வைத்து  வீல் சேரை  தள்ள வைத்தால்
அதுவும்  பிரச்னை .


மருத்துவ படிப்பிற்கு  மருத்துவ குழுமம்  அனுமதி வழங்க  மருத்துவமனையில்  மருத்துவர்கள் , செவிலியர்கள்  எண்ணிக்கை முக்கியம் . மற்ற  பணியாளர்கள் கணக்கில் கொள்வதில்லை .


அவர்களின்  பெயரே " அடிப்படை  பணியாளர்"    ஆனால்  மருத்துவமனை  இயங்குவதோ  அடிப்படையின்றியே.


முன்பெல்லாம்   அறுவை அரங்கில்  அறுவை அரங்கு உதவியாளர்  ,
மருத்துவமனை பணியாளர்  , என 5 க்கும் மேற்பட்டோர்  இருப்பர்  .
ஆனால் இப்போது  5 அரங்கிற்கும் சேர்த்து  ஒருவர்  உள்ளார் .
அறுவை அரங்கில்  அவர்களின் பணியையும்  சேர்த்து செவிலியர் பார்க்க  வேண்டி உள்ளது .


அறுவை  சிகிச்சைக்கு  தயார்  படுத்த  எத்தனை வேலை ?
நோயாளியின்  முடியை  நீக்குவதில் ஆரம்பித்து  நகங்களை வெட்டி ,அறுவை சிகிச்சைக்கான இடத்தை  மருந்திட்டு  துடைப்பது ,
gauze ,bandage  தயாரித்தல்   போன்றவைகளுக்கெல்லாம்  பணி  செய்ய
ஆட்கள் குறைவு.


ஒரு அவசர  தேவைக்கு  டீ வாங்கி  கொடுக்க  கூட ஆளில்லை .
குறிப்பாக  செவிலியர்களுக்கு  வாங்கி  தரக்கூடாது  என  ஒப்பந்த
பணியாளர்களுக்கு  உத்தரவாம்.


நமக்கு  பெயர்  செவிலித்தாய்   ஒரு வீட்டில் தாய்  இல்லாமல்  எதுவும்  இல்லை  . அன்பின்  காரணமாக  தாயிக்கு வீட்டில் மரியாதை  இல்லை .


மொத்தத்தில்.
அதிகாரம்   பரவலாக்க பட வேண்டும் ....
மருத்துவமனை  பணியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட  வேண்டும்.


 செவிலியர்களுக்கான  பணி  மற்றும்  அதிகாரம்  வரையறுக்க பட வேண்டும்.


இது  யாரையும்  குறை  சொல்வதற்கான  பதிவல்ல.
நேரில்  சந்திக்கும்  இடர்களை  வெளிச்சத்திற்கு  கொண்டு  வருவதற்கான  பதிவு.

பா .மணிகண்டன்
நெல்லை.

சேலம் மாவட்டத்தில் செவிலியர்கள் இன்று (29-3-2017) போராட்டம்.

பணி பாதுகாப்பு ,
ஆட்பற்றாக்குறை,
சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் செவிலியர்களை பற்றிய தவறான செய்திகள் திரித்து பரப்புவதை கண்டித்து சேலம் மாவட்ட அரசு நர்சுகள் சங்க தலைவர் திருமதி.புவனேஸ்வரி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.