பாகிஸ்தானில் ஒரு சிறுமி அவளின் 11 வயதில் தாலிபான்களால் பெண் குழந்தைகள் படிக்க கூடாது என்று கூறி பள்ளிகள் மூடப்பட்டது, அன்றே கதறி அழுது அவர்களை தடுத்தவள் இந்த மலாலா என்ற சிறுமி, அதோடு நின்றுவிடாமல் இது தொடர்பாக சமூக வலை தளங்களான பேஸ்புக், வலைப்பூ போன்றவற்றில் எழுதி அங்கு நடைபெறும் அநியாயங்களை உலகம் அறிய செய்தாள். பெண் சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கு எதிராக 11 வயதில் போராட துவங்கினாள் . இதன் விளைவாக அந்த சுமாட் வாலி கிராமத்தில் பாக்கிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து பெண் குழைந்தைகள் கல்வி கற்க நடவடிக்கை எடுத்தது சரி இதற்கும் செவிலியர்களுக்கும் என்ன தொடர்பு என கேட்பது புரிகிறது. இன்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது நம் வேலை இல்லை என தெரிந்தும் பெருக்குவது முதல் இரவு காவலர்கள் வரை அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். இது பற்றி DD இடம் கூறினால் அவர் Deputation போட்டு விடுவார். BMO உன்னை வேலையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணிவிடுவேன் என கூறுகிறார். இதையெல்லாம் விட மேலாக செவிலியர்கள் கூட்டமாக கூடுவது அரசுக்கு எதிரானது அதனால் அவர்கள் மாநில மாநாட்டில் கல