திருச்சியில் திட்டமிடப்பட்ட மீட்டிங்

தமிழ் நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் செவிலியர்களின் நிரந்தர பணி பெற்றிட 2009 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

1. இதுநாள் வரை நம்பியிருந்த அந்த சங்கத்திற்கு ஒப்பந்த செவிலியர்கள் கடிதம் அனுப்பினர்.

2. நிரந்தர செவிலியர்களின் ஊதிய முரண்பாடு ஏற்பட்ட போது, ஒப்பந்த அடிப்படை செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய அரசை வற்புறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

3. ஓப்பந்த செவிலியர்கள் அனைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டது

இது போன்ற ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராய் வீணாய் போணது. 

அது ஏன் என்று தெரியாமல் அனைவரும் குழம்பி போய் இருந்தனர்.

1. ஆனால் அந்த சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு "ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் அந்த சங்கத்தின் பை லா (Bye Law) படி உறுப்பினரே கிடையாது, எனவே அவர்களுக்காக நாங்கள் பேச முடியாது என பதிலுரைத்தனர்."
2. 2010 ஆம் வருடத்திய பேரணி முடிவில் "இதுதான் தரமுடியும், இஷ்டம் இருந்தால் வேலை பாருங்கள், இல்லையேல் வேலையை விட்டு போங்கள்" என எடுத்து எரிந்து பேசினார்கள்
3. ஒப்பந்த செவிலியர்களின் மனுக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என அரசு கோரிய போது "இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம்" என கூறினார்கள் (ஆனால் அரசு ரூ. 500/- NRHM Allowance கொடுத்தது வேறு கதை)

இப்படி ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் நலனை சிறிதும் எண்ணாமல், அனைத்து கிராமங்களிலும் இளம் செவிலியர்கள் துன்பப்படுவதையும், அவர்களின் இரத்தமும் உழைப்பும் உறிஞ்சப்படுவதையும், சுரண்டப்படுவதையும் சிறிதும் எண்ணாமல் பல்வேறு தவறான அரசாணைகளை காட்டி ஒட்டு மொத்த செவிலியர் இனத்தையும் ஏமாற்றப்படுகின்றனர்.

வஞ்சித்த அரசாணைகள்:-

அரசாணை எண்:- 230 நாள்:- 04-09-2001
அனைத்து துறைகளிலும் 2 வருடம் ஒப்பந்தம் அதன் பிறகு நிரந்தரம் என 2001 ல் அரசாணை வெளியிட்ட போது செவிலியர் இனத்திற்கும் வஞ்சனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு 2 வருடம் முடித்தாலும் நிரந்தர பணியிடம் காலியாக இருந்தால் தான் நிரந்தரம் என அரசாணை வெளியிட்டது. 

அதனை சிறிதும் எண்ணாமல் இன்று 6000 செவிலியர்களின் குடும்பத்தை அது பதம் பார்த்துக் கொண்டு உள்ளது என்பது நிதர்சன உண்மை.

அரசாணை எண்:- 234 நாள்:- 01-06-2009
ஒப்பந்தத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு 25 % ஊதிய உயர்வு என அரசாணை வெளியானபோது செவிலியர்கள் என்னவோ அதிக ஊதியம் பெறுவது போல ரூ.500/- ஊதிய உயர்வு பெற்று அதிகமாக பெற்ற ஊதியத்தினையும் குறைத்து பெற்ற ஒரே அமைப்பு, இந்தியாவிலேயே செவிலியர் அமைப்பு தான்.
(நிரந்தர செவிலியர்களுக்கு ரூ. 250/- தான் என்பது வேறு கதை)

அரசாணை எண்:- 395 நாள்:- 14-10-2010
செவிலியர்களின் தர ஊதியம் (Grade Pay) உயர்ந்த போது செவிலியர்கள் ரூ. 13110/- அடிப்படை ஊதியத்தில் நிர்ணயம் செய்யப்படுவர் என கூறி ஒட்டு மொத்த நிரந்தர செவிலியர் இனமும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. 

அரசு கடித எண்:- 34281 நாள்:- 10.09.2009
அரசு மருத்துவமனைகளில் தாய் சேய் இறப்பு ஏற்படும் போது அவர்களுக்கு இழப்பீடு வழங்க ஏற்படின் அத்தொகை பணியாளரின் ஊதியத்தில் பிடிக்கப்படும் என ஒரு கடிதம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

இது செவிலியரை நோக்கி எறியப்படும் ஆயுதம் என்பது அனைவரும் அறிந்ததே  

இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செவிலியர்கள் பெற்று வரும் ஊதியத்தினையும் கபாளிகரம் செய்ய அரசுக்கு வழிவிட்டு உள்ளோம்.

அரசாணை எண்:- 29 நாள்:- 18-01-2012
இத்தனை காலமாக அரசு பயிற்சி பள்ளிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு செவிலியர் பணி என்ற நிலையை மாற்றி 
நமது செவிலிய சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தம் படைத்தது இந்த அரசாணை. 
(பயிற்சி செவிலியர்களுக்கு  1 வருட காலம் உள்ளுரை பணி Internship என அரசு வெளியிட்ட ஆணை இரவோடு இரவாக திரும்ப பெற வைத்த அதே அமைப்பு) 
இதற்கு "பயிற்சி செவிலியர்களுக்காக நாம் பேச முடியா"து என கூறி ஏமாற்றியது வருத்தமே.

இப்படி செவிலியர்களின் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாத ஒரு அமைப்பு இன்று ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் நிரந்தரத்திற்கு ஒரு மீட்டிங் வைக்கிறது எனும் போது இதனையெல்லாம் எண்ணிப்பார்க்க தோன்றுகிறது. 

இதோடு

16-06-2012 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசிடம் கோரிக்கை வைத்த போது, கோரிக்கையை நிறுத்துங்கள் உங்களுக்கு ஊதிய உயர்வு பெற்று விட்டோம், விரைவில் நிரந்தரம் என கூறி ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்டனர்.

07-10-2012 அன்று திருச்சியில் மாநில மாநாடு நடத்தி அதன் மூலம் செவிலியர்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலிக்க செய்யாலாம் என எண்ணிய போது ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்களின் கோரிக்கை அரசுக்கு எதிரானது என ஜோடித்து ஒரு நிகழ்வை நிறுத்தினார்கள். அதோடு திருப்பூரில் மாநாட்டிற்கு யாரும் செல்லாமல் இருந்தால் டிசம்பர் திங்களில் அனைவருக்கும் நிரந்தரம் பெற்று தறுவேன் எனக் கூறியவர்கள் இன்று ஜனவரியில் அதற்கு அடித்தளம் போடுகிறார்களாம்.
ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் நிரந்தரத்திற்கு பாடுபட போகிறார்களாம்.

நான் கூட்டத்திற்கு போக போவதில்லை

அப்படி சென்றால் 

என்னுடைய கேள்வி எல்லாம் இதுதான்

1. ஏன் ஆண் செவிலிய பயிற்சியை நிறுத்தினார்கள்
(இன்று இந்த கூட்டத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் ஆண் செவிலியர்களின் வம்சம் ஒழிந்து போய் விட்டது என்பதை அவர்கள் அறிவார்களா?)

2. அரசு பயிற்சி செவிலியர்களின் வேலைக்கு என்ன உத்திரவாதம்

3. 2013 வருடத்தில் 4000 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்ய உள்ளனர் 10000 (6000 + 4000) ஒப்பந்த செவிலியர்களை வைத்து கும்மி அடிக்க போகிறோமா என்ன?

( இந்த மீட்டிங்கே 4000 ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நியமனம் செய்ய செவிலியர்கள் எனும் நம்மை ஏமாற்றி மேலும் ஒப்பந்த அடிப்படையை அதிகரிக்க தான், இதை நிரந்தரத்திற்கான ஆயத்தம் என ஏமாற்றுவது எப்படி பொருந்தும்)
Tamilnadu Nurse



தமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

Post a Comment

Previous Post Next Post