தொழில் வரி விதிப்பு குறித்து செவிலியர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

தொழில்வரி செலுத்துவது தொடர்பாக அனைவருக்கு உள்ள சந்தேகங்களை தொகுத்து எளிய தமிழில் கோயம்பத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு அதன் விவரம் தரப்பட்டுள்ளது.


மேலும் பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் தொழில்வரி தொழில் விகிதங்கள் கடைசியாக தரப்பட்டுள்ளது.

1) மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்த தகுதியானவர்கள் யார் யார்?
மாதாந்திர ஊதியமாக ரூ.3,500/- க்கு மேல் அதாவது 6 மாத வருமானமாக ரூ. 21,000/-க்கு மேல் பெறப்படும் அனைத்து தனிநபர் மற்றும் நிறுவனங்கள்.

2) நிறுவனத்திற்கு தனியாக தொழில்வரி செலுத்தப்பட வேண்டுமா?
ஆம். 6 மாத வருமானமாக ரூ. 21,000/-க்கு மேல் ஈட்டக்கூடிய நிறுவனங்கள் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தப்பட வேண்டும்.

3) தொழில்வரி செலுத்துவதிலிருந்து யார் யாருக்கு விலக்கு உள்ளது ?
கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 169 ன்படி,
i. முப்படைகளில் தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலர்கள்,
ii. மாற்றுத்திறனாளிகள்,
iii. மத்திய பாதுகாப்பு காவல் (CRPF) துறையில் பணிபுரிகின்ற அனைத்து நிலை அலுவலர்கள்.

4) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழில்வரி விதிக்கப்படுகிறதா?

இல்லை.

5) மாநகராட்சிக்கு ஆண்டுக்கு எத்தனை முறை, எந்தெந்த மாதங்களில் தொழில்வரி செலுத்தப்பட வேண்டும் ? 
வருடத்திற்கு 2 முறை அதாவது பிரதி வருடம் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொழில்வரி பிடித்தம் செய்து செலுத்தப்பட வேண்டும்.

தொழில் வரி விகிதங்கள் என்ன?

1
 ரூ. 21000/- வரை
இல்லை.
2
ரூ. 21001/- முதல் ரூ.30000/- வரை
ரூ.127/-
3
ரூ. 30001/- முதல் ரூ.45000/- வரை
ரூ.317/-
4
ரூ. 45001/- முதல் ரூ.60000/- வரை
ரூ.634/-
5
ரூ. 60001/- முதல் ரூ.75000/- வரை
ரூ.950/-
6
ரூ.75001/- மேல்
ரூ.1268/-



6) தொழில்வரி செலுத்துவதற்கான குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச தொகை யாது ?

நிறுவனத்திற்கு அதிகபட்சமாகரூ.1268/-ம்,

தனிநபர் மற்றும் பணியாளர்களுக்கு அவர்களின் அரையாண்டு வருமானத்திற்கு ஏற்றவாறு குறைந்தபட்சமாக ரூ.127/-ம் அதிகபட்சமாக ரூ.1268/-ம் அரையாண்டு தொழில்வரித் தொகை செலுத்தப்பட வேண்டும்.

7) தொழில்வரி செலுத்தாதவர்கள்,  மீது மெற்கொள்ளப்படும் நடவடிக்கை என்ன?
வருடத்திற்கு 12 % அபராதம் மற்றும் குழநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் மெற்கொள்ளப்படும்.

8) மாநகராட்சியின் எல்லைக்கு அப்பாலுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் எங்கு தொழில்வரி செலுத்த வேண்டும் ?

மாநகராட்சிக்கு செலுத்தப்படவேண்டியது இல்லை,

ஆனால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் செலுத்தப்படவேண்டும்.

9) வெளிமாவட்டத்தில் அலுவலகம் அமைந்து கோவை மாநகாராட்சி எல்லைக்குள் உள்ள கிளை அலுவலகத்தில் பணி செய்யக்கூடியவர்கள் எங்கு தொழில்வரி செலுத்தப்பட வேண்டும் ?

கோவை மாநகராட்சி எல்லைக்குள் பணிபுரியும் நபர்களுக்கு கோவை மாநகராட்சியில் தொழில்வரி செலுத்தப்படவேண்டும்.

10) தொழில்வரி செலுத்த எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? எங்கு எவ்வாறு தொகை செலுத்தப்பட வேண்டும் ?
சம்பந்தப்பட்ட மண்டல வரி வசூல் மையங்களில் ”ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி” என்ற பெயரில் செலுத்தலாம்.

11) தொழில்வரி செலுத்துவதற்குண்டான மாநகராட்சியின் சட்ட விதி மற்றும் பிரிவு என்ன?
கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 169 A முதல் I வரை

12) பேரூராட்சியில் தொழில் வரி விகிதங்கள் என்ன?

1
 ரூ. 21000,- வரை
இல்லை.
2
ரூ. 21001,- முதல் ரூ.30000,- வரை
ரூ.100/-
3
ரூ. 30001,- முதல் ரூ.45000,- வரை
ரூ.235/-
4
ரூ. 45001,- முதல் ரூ.60000,- வரை
ரூ.510/-
5
ரூ. 60001,- முதல் ரூ.75000,- வரை
ரூ.760/-
6
ரூ.75001,- மேல்
ரூ.1095/-

Please Click Here for பேரூராட்சி தொழில்வழி வரி விகிதம் Document

12) ஊராட்சியின் தொழில் வரி விகிதங்கள் என்ன?

1
 ரூ. 21000,- வரை
இல்லை.
2
ரூ. 21001,- முதல் ரூ.30000,- வரை
ரூ.60/-
3
ரூ. 30001,- முதல் ரூ.45000,- வரை
ரூ.150/-
4
ரூ. 45001,- முதல் ரூ.60000,- வரை
ரூ.300/-
5
ரூ. 60001,- முதல் ரூ.75000,- வரை
ரூ.450/-
6
ரூ.75001,- மேல்
ரூ.600/-

Please Click Here for ஊராட்சி தொழில்வரி வரிவிகிதம் Document


1 Comments

  1. இம்முறையான வரி வசூல் செய்வது என்பது ஏழை எளிய மக்களின் சராசரி வருமானத்தை அபகரிக்கும், செயலாக உள்ளது.வருடத்திக்ற்கு வீட்டு வரி,தண்ணி வரி என வசூல் செய்கின்றன மேலும் வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி என ஏழை எளிய மக்களின் வருமானத்தை வசூல் செய்து ஏழைகளை இன்னும் ஏழைகளாகவே ஆக்கும் வரியாகவே உள்ளது.

    ReplyDelete
Previous Post Next Post