தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் 2015

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வரும் 18-4-2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது. அனைத்து செவிலியர்களும் தவறாது தங்களது வாக்கு உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மாநில நிர்வாகிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களுடைய மாவட்ட உறுப்பினர் பட்டியலை ஏற்கனவே அவர்களது சொந்த பொறுப்பில் சமர்ப்பித்து உள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் பல தேர்தல் அலுவலர்களுக்கு (செவிலிய கண்காணிப்பாளர்களிக்கு) தேர்தல் நடைமுறைகள் தெரியவில்லை. இதனால் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இன்னும் பழைய நிர்வாகிகள் மற்ற செவிலிய காண்காணிப்பாளர்களை மிரட்டிக் கொண்டுதான் உள்ளனர். 
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தலில் மும்முனை போட்டி நிலவிகிறது. 3 அணிகளுக்கும் பலம். பலவீணம் உள்ளது.
செவிலியர் நலன் காக்கும், போராட்ட குணம் கொண்ட, ஊழல் இல்லா, பெருந்தனமையுள்ள, அரசாணைகளை படிக்க தெரிந்த தனி நபர்களை ஆதரிக்கும் கடமை நமக்கு உள்ளது.
கடந்த காலங்களில் சங்கம் சரியாக செயல்படாததால் உறுப்பினராக ஆவதையே செவிலியர்கள் வெறுக்கின்றனர். ஆனால் கடந்த காலத்தை நாம் மாற்ற இயலாது. ஆனால் வருங்காலத்தை நாம் தீர்மானிக்கலாம்.
நம் செவிலிய தலையெழுத்தை மாற்ற நமக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடாதீர். யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தங்கள் வாக்கை தவறாமல் செலுத்தவும்.

1 Comments

Previous Post Next Post