அரசாணைகள் படிப்பது எப்படி?

uசெவிலியர்கள் தம் துறை தொடர்பான அரசாணைகள் வெளிவரும்போது அவற்றின் சாரம்சம் என்ன என அறிவது இல்லை,

இதனால் பொக்கிசம் போல் பாதுகாக்க வேண்டிய பல அரிய அரசாணைகள் ஒரு செவிலியரிடமும் இல்லை.

ஒவ்வொரு அரசாணைக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கும், பெரும்பாலான நேரங்களில் அவை அந்த அரசாணையில் விவரிக்கப்பட்டு இருக்கும்.

அரசாணைகள் முன்னாள்  ஆங்கிலேயரின் நமது இந்தியாவை அடிமை படுத்திய போது அந்தந்த மாகான மக்களை அடக்கவும் ஒடுக்கவும் இயற்றப்பட்டதால் இப்போதும் அரசாணைகளில் இக்கு வைக்கப்பட்டு ஏதாவது ஒரு வகையில் அவை பயன்படாமல் போகும் வகையில்  வெளியிடப்படுகின்றன.

தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பினும், அரசாணைகள் தமிழில் வெளியிடப்படாததல், ஆங்கிலத்தில் அனைத்து விதங்களிலும் புலமைப் பெற்ற பல அலுவலக அமைச்சு பணியாளர்களுக்கே படிப்பது கடினமான செயல்தான்.

நமக்கு பயன்படும் அரசாணைகள் வெளியிடும் துறைகள் எவை?
1) நிதித்துறை ( Finance Department)
2) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ( Health & Family Welfare)
3) பொதுத்துறை ( Public Department)
4) பொதுப்பணித்துறை
5) தமிழ்நாடு சுகாதார திட்டம் ( TNHSP)
6) தேசிய சுகாதாரத் திட்டம் ( NRHM - TN)

போன்றவற்றில் நமக்கு பயனுள்ள அரசாணைகள் அவ்வப்போது வெளியிடப்படும்.

பொதுவாக அரசாணைகள் துறை ரீதியான ஊழியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், துறை இயக்குநர், துறை வாரி சங்கங்களின் தலைவர்களால் வேண்டப்பட்டு, முதன்மைச் செயலாளரால் வெளியிடப்படும்.

கடந்த ஆண்டுகளில் 2010 ல் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் அரசாணை 395 பெற்றது. தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் அர்சாணை 400 (2:1) பெற்றது. இவைகள் மட்டுமே செவிலிய நலன் காக்கும் அரசாணைகள்.

மற்ற அனைத்து அரசாணைகளும் செவிலியர் நலனுக்கு எதிரானதே.
இவை தெரிந்தும் தெரியாதது போல் இருப்பதே நமது செவிலியர்களின் நிலை.

அரசாணை 230
2 வருடங்களுக்கு பிறகு காலி பணியிடம் இருந்தால் பணி நிரந்தரம் என கூறி ஒட்டு மொத்த செவிலியரின் வாழ்வை சிதைத்தது.

அரசாணை 395
செவிலிய கண்காணிப்பாளர் நிலை-3 ஐ செவிலிய கண்காணிப்பாளர் நிலை-2 உடன் இணைத்து செவிலியர்களுக்கு கிடைத்த பதவி உயர்வை அழித்தது

Post a Comment

Previous Post Next Post