தமிழ்நாடு அரசு செவிலியர்களின் 7 வது ஊதியக் குழு கருத்தரங்கம்
செவிலியர் மன்றம் மற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு அரசு செவிலியர்களின் 7 வது ஊதியக் குழு கருத்தரங்கம் திருச்சி, அருண் மினி ஹாலில் 10-04-2017 அன்று காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை நடைபெற்றது.


இதில் ஒப்பந்த செவிலியர்கள் படும் இன்னல்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், ஒப்பந்த காலத்தை பணிக்காலத்துடன் இணைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது.


மேலும் 6 வது ஊதிய குழுவில் நாம் இழந்தது, அரசு இரவு 9 மணிவரை நம்மை இழுத்தடித்தது, அதன்பிறகும் ₹.250/- மற்றும் ₹.500/- படி வழங்கியது பற்றியும் பேசப்பட்டது.


மருத்துவமனையில் செவிலியரின் பணியும் மற்ற மருத்துவ துறை நண்பர்களின் பணியும் ஒன்றல்ல, செவிலியர்கள் படும் இன்னல்கள், நேரடி தாக்குதல், பொறுப்புகள் போன்றவை விளக்கப்பட்டது.


மத்திய அரசு செவிலியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம், அதனால் அவர்கள் பெற்ற பலன் பற்றி பேசப்பட்டது.


தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைத்த குழு அளித்த பரிந்துரைப்படி ஊதியம் மற்றும் சலுகைகள் பெற நடவடிக்கை எடுக்க பேசப்பட்டது.


அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தி, 7-வது ஊதியக் குழுவில் செவிலியர்களுக்கு முறையான ஊதியம் பெற அனைத்து செவிலியர்களையும் தயார்படுத்த தீர்மானம் இயற்றப்பட்டது.

0 comments:

Post a Comment

 
l
j