Skip to main content

Tamil Nadu Seventh Pay Commission Government Order and Fixation

Pay Fixation

The Tamilnadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும்.
எனவே 2.57 என்ற multiplication factor ஆல் பெருக்கும் போது Pay + Grade Pay மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Pay Matrix

2.57 ஆல் பெருக்கி வரும் தொகையை Pay Matrix Table - ல் அவரவர் Grade Pay level உள்ள கட்டத்தில்  அதற்கு இணையான தொகை அல்லது அடுத்த கூடுதலான ( either equal or to next higher) தொகையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இதுவே 1.1.16 - ல் ஒருவரின் புதிய அடிப்படை ஊதியம் ஆகும்.

Increment

  பக்கம்  14 - ல் 9 Increments in pay matrix என்ற தலைப்பில் The increment shall be effected by moving vertically down along the applicable level by one cell from the existing cell of pay in the Pay matrix.
(Illustration - III - See schedule - V) என உள்ளது.

அதாவது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் கீழ் one cell வருவது ஒரு increment ஆக இருக்கும் என்பதாக உள்ளது. (Vertically down along the applicable level by one cell).

எனவே increment - க்கும் Pay matrix இவ்வாறாக பார்த்து increment தொகையுடன் கூடிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறாக அடுத்த increment - க்கு அடுத்த cell - க்கு கீழே வந்து அதனை increment உடன் கூடிய ஊதியமாக கொள்ள வேண்டும்.
*Increment தொகை 3% தொகையளவு இருந்தாலும் ஆறாவது ஊதிய குழு போல 3% ஆல் வகுத்து கணக்கிட தற்போதைய குழுவில் விதிகளில் இடமில்லை, pay matrix தான் increment - க்கும் பார்க்க வேண்டும்.

தேர்வுநிலை/சிறப்புநிலை கணக்கிடல்

தேர்வுநிலை/சிறப்புநிலைகளில் 3% + 3% என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

பக்கம் 3-ல் 10- ல் இவைகளை குறிப்பிடும் போது two increment என்றே உள்ளது.

எனவே increment கணக்கிட கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின்படியே தே.நி/சி.நி கணக்கிடும்போது two increments - க்காக pay matrix - ல் two cell கீழே வந்து ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.


ஏழாவது ஊதியக் குழு - ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்க கீழ்கண்ட மூன்று வழிமுறைகளை பின்பற்றலாம்

1. 01.01.2016 அல்லது

2. 01.01.2016 க்கு பிறகு ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம் அல்லது தற்போது பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது எனில் பதவி உயர்வு பெற்றுக் கொண்டு அதே தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம். அல்லது

3. 01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவி உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.

கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து அரசாணையை Download செய்து கொள்ளவும்.

7TH PAY COMMISSION GOVERNMENT ORDER


7 வது ஊதியக்குழுவில் பல குளறுபடிகள் இருந்தாலும் தற்போது அறிவித்துள்ள ஊதியமாற்றம் எப்படி அமைப்பது. Option Form நிரப்ப சுலபமாக உயர்திரு. தர்மராஜ் ஆசிரியர் அவர்கள் உருவாக்கிய Excel File இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக Upload செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்து பயன்படுத்தவும்.

Entry Level Pay வேலை செய்யவில்லை. (9300).

Please Click Here to Download Excel File

Comments

  1. Enter your comment...all download file cwn not open pls

    ReplyDelete
  2. This is what I need. Thank you for sharing!
    piknu

    ReplyDelete
  3. பழகுநிலையில் இருப்பவருக்கு தற்காலிகமாய் பதவி உயர்வு அளிக்கப் படலாம். ஆனால் பதவி உயர்வுக்கு முன் இருந்த கீழ்நிலைப் பதவியில் பழகுநிலையை முடித்த பின்னரே உயர்நிலைப் பதவியில் பணி ஒழுங்கு படுத்தப்படும்"


    பதவி உயர்வுக்கு மேல்கண்ட அரசாங்க ஆணை எண்(government G.O Number) தேவைப்படுவதால் தயவு செய்து கொடுத்து உதவவும்

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms