Skip to main content

President, Nurses Joint Action Committee Statement about Nurses Day

மே-12   உலக செவிலியர் தினம் -  செவிலியர் உரிமைகள் மறுக்கின்ற் தினம்

ஏன்

செவிலியர்களுக்கு சமூகத்தில் சமூக மதிப்பு, பங்களிப்பு, சமூகத்தின் பார்வையில் தவறான புரிதல் போன்றவற்றால்  செவிலியர்களின் தனித்தன்மையான சேவையின் மதிப்பு குறைந்து வருவது

அதிகாரங்கள் அனைத்தும் மருத்துவர்களுக்கு கொடுத்து விட்டு, செவிலியர்களால் நிர்வாக திறமை இல்லாதவர்கள் போன்ற பிரம்மையை உருவாக்கி அவர்களுக்கு என்று தனி இயக்ககம் மறுக்கப்படுவது அதிகாரத்தின் உச்சம்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளை 10000 செவிலியர் பற்றாக்குறையை பாவம் அந்த மாணவிகளை வைத்து INC யிடம் கணக்கு காண்பிப்பதற்காக அவர்களை கட்டாய விடுதியில் வைத்து, ஒழுங்கற்ற உணவை கொடுத்து, ஒரு சிலரின் உயிரையையும் பறித்து, போதிய செவிலிய       TUTOR  களை அமர்த்தாமல் | தரமான கல்வியை கொடுக்காமல்,கடைசியில் வேலை வாய்ப்பையும்  ஏமாற்றிய அவலம்

தனியார் துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 20000 என்று உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்தும், அதை மதிக்காமல் 14,000 என்று நிர்ணயம் செய்து ஏமாற்றிய தொழிலாளர் ஆணையம்

MBBS போன்ற படிப்புகளில் மட்டும் துணை நிலை படிப்புகள் வராமல் பார்த்துக் கொண்ட மருத்துவர்கள் செவிலிய துறையிலும் மற்ற துறையிலும் கார்ப்ரேட்டு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு கட்டு அவிழ்த்து விட்ட எண்ணிலடாங்க துணை நிலை மருத்துவ படிப்புகளினால் சமூகத்தில் மருத்துவர்களால் திட்டமிட்டு நுழைய விட்ட அவலம்

MCI கலைக்கப்பட போகிறது என்று நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முயன்ற போது அதை தங்கள் அதிகார போதை குறைக்க படுகிறது என்று அறிந்து அதை போராட்ட வடிவுக்கு கொண்டு போய் சட்டத்தை கொண்டு வராமல் செய்து கொண்டு இருக்கும்  மருத்துவ சங்கங்களின் காலடியில் கிடக்கும் உயர் அதிகார கூட்டம்

மருத்துவ துறையை சேவை துறையை கருணை துறையை உலகின் சிறந்த தொழிற்துறையாக மாற்றிய, மாற்றிக் கொண்டு இருக்கும் கார்ப்ரேட் மருத்துவமனைக்கு துணை நிற்கும் அரசுகள், மருத்தவர்கள்

10ம் வகுப்பு முடித்து பாலிடிக்னிக் படித்தவர்கள் நேரடியாக B.E  யில் 2ம் ஆண்டு சேரலாம் ஆனால் மருத்துவ துறையில் மட்டும் MBBS படிப்புக்கு Diplomo Nursing, Bsc, msc ஐ அனுமதிக்காமல் தங்களின் அதிகாரத்தை இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டும் கோடி கோடியாய் செலவழித்துக் கொண்டும் இருக்கிற மருத்துவர் சங்கங்கள் மற்றும் அதிகார வர்க்கம்

அரசு செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பை MRB மூலம் தனியார், அரசு பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு என்று மாற்றி விட்டு, ஆனால் அரசு செவிலிய போதகர்களுக்கான பணி நியமனத்துக்கு, தனியாரில் பயின்ற செவிலியர்களுக்கும் வாய்ப்பு உண்டு என்று G.0 வெளிவிட்டு பல்லாண்டு ஆகியும் இன்றும் அரசு செவிலியர்களை மட்டும் நியமனம் செய்து வருவது தரமான கல்வி ஏழை அரசு பள்ளி மாணவிகளுக்கு கிடைக்காமல் செய்து வருவது வேடிக்கையின் உச்சம்

அரசு செவிலியர்களை 7,700 சம்பளத்தில் அமர்த்தி விட்டு அதை பெருமையாக கூறியதோடு இல்லாமல்   அந்த செவிலியர்களின் மனதை சேவையை கொச்சைபடுத்தி மிரட்டி, அவர்களின் உயிரை வாங்கிய அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக துணை போன அவலம்

MRB என்று அறிவித்து அதில் அத்தனை மருத்துவர் மற்றும் செவிலியர் மற்றும் பல துறைகள் உள்ளடக்கி MRB மூலமே பணி யிடங்கள் நிரப்பப்படும் என்று G.0 போட்டுவிட்டு வெறும் Exam Centre ஆ க மட்டும் MRBயை மாற்றி இன்றும் DMS மூலமே பணி நியமன ஆணை பணி மாறுதல் போன்றவற்றை செய்து வருவது அப்ப எதுக்குTNPSC போன்று MRB என்ற அறிவிப்பு மிகப் பெரிய கேள்வி அதிகாரத்தின் உச்சகட்டம்

மேலே உள்ள அத்தனைக்கும் துணை நிற்கும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில்,  போன்ற லஞ்ச பெருச்சாளிகள்

இவை அனைத்தும் செவிலியர்கள் வாழ்வாரத்தை பாதித்து அவர்களின் தரத்தை கீழே கொண்டு செல்லகண்ணுக்கு இட்டா இன்னும் பல பெருச்சாளிகள் இருக்கிறது.

இவையெல்லாம் தவிர்த்து மேலை நாடுகள் போல் சுயமான Nursing Practioner வாய்ப்பை தராமல் இன்னும் 2 நிமிடங்களுக்கு மட்டும் நோயாளியை பார்க்கும் மருத்துவர்களின் கையில் மருத்துவ துறை இருக்கின்ற வரையிலும், அதிகாரத்தை சமமாக பிரித்து அனுதிக்காமல் போனால் இன்னும் 100 வருடங்க் ஆனாலும் May-12 செவிலியர்களை நினைவு படுத்தும் தினமாக அமையுமே ஒழிய சேவை, கருணை, உள்ளம் ,பங்களிப்பு, சமூக அந்தஸ்து, சமூத்தின் பார்வை போன்றவை சேர்த்து கொண்டாடும் தினமே
நாம் அனைவரும் ஏறறு்க்கொள்ளும் ''செவிலியர் தினம்"

அதுவரை நாங்கள் / நானும் கொண்டாடப் போவதில்லை இந்த தினத்தை செவிலியர் தினமாக

உரிமைகள் மறுக்கின்ற  தினம், MAY - 12

by
PRESIDENT
NURSES JOINT ACTION COMMITTEE
8681978425

Comments

Post a Comment

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms