செவிலியர் உறுதிமொழி

“நான்,

இந்த அவையில்,

இறைவன் முன்னிலையில்,

எனது வாழ்க்கையை தூய்மையாகவும்,

எனது செவிலிய தொழிலை அர்ப்பணிப்புடனும்,

நடத்தி

செயல்படுவேன் என
உறுதி எடுக்கிறேன்.

எனக்கோ,

எனது செவிலிய பெயருக்கோ,

களங்கம் விளைவிக்கும்,

அனைத்து செயல்களில் இருந்தும்,

நான் விலகி இருப்பேன்.

பிணியாலர்களுக்கு,

எந்தவிதமான
கெடுதலையும் விளைவிக்க கூடிய

மருந்தினை கொடுக்கவோ,

நானும் கெடுதல் விளைவிக்கும் மருந்தை எடுக்கவோ மாட்டேன்.

எனது சக்திக்கு உட்பட்டு,

எனது செவிலிய பணியின் தரத்தை
நிலைக்க செய்யவும்,

அதன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும்,

நான் பாடுபடுவேன்.

நான் பணியில் இருக்கும் பொழுது,

எனக்கு தெரிய வருகிற,

பிணியாலர்களின்
தனிப்பட்ட மற்றும் குடும்பம்
சம்பந்தப்பட்ட செய்தியின்,

இரகசியத்தை காப்பேன்.

எனது முழு மனதுடன்,

மருத்துவர் நோயாளிக்கு செய்யும் பணிகளில்,

அவருக்கு உதவியாக இருப்பதுடன்.

என்னிடம் ஒப்படைக்கப்பட்ட,

பிணியாளரின்
நலனுக்காக நான் பாடுபடுவேன் என உறுதி ஏற்கிறேன்.

--இது ஹிப்போகிரேட்சினால் உருவாக்கப்பட்டது

-- திருமதி லிஸ்ட்ரா ஹிரிட்டர் மற்றும் குழுவால் வடிவமைக்கப்பட்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது..)

-- தமிழக செவிலியர்களுக்காக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post