From Vijay Bhaskarvijay அவர்களின் Facebook பதிவிலிருந்து Click Here for Original Post ஏன் சமூக நீதி அறிவுடையவர்கள் படித்து ஒரு பதவியில் அமரவேண்டும். அமர்ந்த பிறகும் அதே சமூக நீதி அறிவை கொண்டிருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ? ஒரு ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்பு சொன்ன சம்பவம் இது. அவர் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது ஒரு கட்டுரைப்போட்டி நடந்ததாம். அதில் இரண்டு கட்டுரைகள் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறது. ஒரு கட்டுரை மதத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை சொல்லும் மேலோட்டமான நோக்கமுள்ள நல்லமுறையில் எழுதப்பட்ட கட்டுரை. கண்ணதாசன் எழுதி இருப்பாரே “இதற்குதான் தாலி கட்ட வேண்டும். இதற்குதான் மெட்டி போட வேண்டும்” என்ற ரீதியில் எழுதப்பட்ட யாவரையும் கவரும் ஆனால் நல்ல நோக்கமில்லாத கட்டுரை. இன்னொன்று நதிநீர் சுத்தத்தை எப்படி காக்க வேண்டும் என்ற நன்நோக்கில் எழுதப்பட்ட சுமாரான கட்டுரை. இரண்டை எழுதிய மாணவிகளில் மதக்கட்டுரை எழுதிய மாணவிக்கு நிறைய ஆதரவு இருந்திருக்கிறது. “சார் அதுதான் நன்றாக இருக