அனைவருக்கும் வணக்கம். நேற்று IGNOU பற்றி வந்தது போன்ற செய்திகளை நான் எப்போதும் கடந்துவிடுவேன், ஆனால் ஐயா கலைஞர் கூறியது போல *”கோவில் கூடாது என்பதல்ல கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதே”* நான் படிக்கும் போது எங்களுடைய மெடிக்கல் சூப்பிரண்டண்ட் கூறினார் உங்களுக்கு என்ன வேணும்ன்னு கேளுங்க அதவிட்டுட்டு அவனுக்கு அத தராதீங்க, இவனுக்கு இத தராதீங்கன்னு சொல்லாதீங்க என்றார். அதுபோல ஒரு முன்னேற்ற சங்கம் எப்படியாவது உடன் இருப்பவர்களை தூக்கிவிட எண்ண வேண்டும், அதைவிட்டு மற்றவர்களின் காலை வாரி விட்டு அவர்கள் மேல் ஏறி நின்று முன்னேற நினைத்தால் அது என்றாவது ஒரு நாள் சரிந்தே விழும். தமிழக சுகாதார துறையில் தற்போது அரசு பணியில் உள்ள செவிலியர்களுக்கு Post Basic BSc Nursing படிக்க 70 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் IGNOU வில் சென்ற வருடம் 90 இடங்களும், இந்த வருடம் இது போன்ற கயவர்களின் எண்ணத்தால் 60 இடங்களும் மட்டுமே உள்ளன. *நம் முதல்வர், நமக்கான முதல்வருக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள், தமிழக அரசு இன்னும் 10 கல்லூரிகளில் IGNOU மூலம் Post Basic BSc Nursing படிக்க அனுமதிக்க வேண்டும், (TNC Re