அன்புடையீர் வணக்கம். தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மற்றும் தாதியர் குழுமம் (Tamil Nadu Nurses and Midwives Council) செவிலியர்கள் (Nurse), துணை செவிலியர்கள் (ANM), சுகாதார பார்வை அதிகாரிகள் (Health Visitors) ஆகிய அனைவரையும் தங்களுடைய பதிவை புதுப்பிக்க கோரி பல ஆண்டுகளாக கேட்டு வருகிறது. தங்களுடைய பதிவு பெற்ற செவிலியர், துணை செவிலியர் சுகாதார பார்வை அதிகாரி உரிமம் கொண்டவர்கள் மட்டுமே அப்பணியை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பணி செய்ய தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள். BSc MSc படிக்க போகும் போது Renewal கேட்கிறார்கள், NABH, NQAS, MCI Visit இன் போது Renewal கேட்கிறார்கள். CNE நடத்த வேண்டும் என்றாலும் Renewal கேட்கிறார்கள். (எப்படி வாகன ஓட்டிகள் அனைவரும் வாகன ஓட்டி உரிமம் வைத்திருக்க வேண்டுமோ அதுபோல மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், துணை சுகாதார செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள் பல் மருத்துவர்கள், பல் மருத்துவ மெக்கானிக்கள் போன்றவர்கள் தங்களுடைய பதிவுகளை பதிவுசெய்து இருக்க வேண்டும், குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு பதிவினை புதுப்பித்து வைத்திருக்க வேண்டியது அரசு விதிகளின்படி கட்டாயமா