Income Tax Calculation Excel for Nurses


"As February unfolds, government employees find themselves immersed in the annual ritual of calculating and submitting their income tax statements to their respective office. Recognizing the importance of this task, I have crafted an updated and user-friendly Excel file that empowers individuals to conveniently compute their income tax right from the palm of their hands. This mobile-friendly solution is designed to simplify the tax calculation process, making it more accessible and efficient for Nurses. In an effort to contribute to financial ease, I am excited to share this resource on my blog, providing a valuable tool to navigate the intricacies of income tax filing with greater convenience and accuracy."


வாட்ஸ்அப்பில் வந்தது.

வருமான வரி சார்ந்த தகவல்கள்/சந்தேகங்கள்.

 1) எனக்கு பழைய முறை புதிய முறை எது சிறந்தது?

HRA, 80G(donation), 80D (medical insurance) 80C (lic, PLI, GPF, CPS, OTHER savings) Home loan போன்ற deductionS உள்ளது old regime (பழைய முறை)

 

StANDARd deduction 50,000  மட்டும் உடையது New regime (புதிய முறை) வருமான வரி சட்டம் படி அதற்கு பெயர் Section 115BAC.

தங்களின் வருமானம் மற்றும் சேமிப்புகள் அடிப்படையில் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து எதில்  குறைந்த வருமானம் வரி வருகிறதோ அதை தேர்ந்து எடுக்கலாம் 👍🏼 

 

2) புதிய முறைக்கு வந்த பிறகு பழைய முறைக்கு மாற இயலுமா

இந்த முறை நான் புதிய முறைக்கு மாறினால் அடுத்த முறை பழைய முறைக்கு மாற இயலுமா ?

 

SECTION 115BAC எனும் புதிய முறை (NEW REGIME) 1-4-2021 முதல் அறிமுகம் ஆனது. புதிய முறை மற்றும் பழைய முறை உங்கள் விருப்பம் தான்.எதிலும் மாறிக் கொள்ள இயலும்.

இந்த நிதியாண்டில் (2023-24) பழைய முறையில் எந்த ஒரு புதிய சலுகைகள் இல்லை ஆனால் புதிய முறையில் 50,000/- STANDARD DEDUCTION கழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு முறையில் மாற்றம் என சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு புதிய முறையில் கூடுதல் குறைவான வரி கிடைக்கிறது.

 

3) இந்த ஆண்டு (2023-24) DEFAULT REGIME IS NEW REGIME (SEC 115BAC ) என்கிறார்கள் அப்படி என்றால் என்ன?

 இந்த ஆண்டு 2023-24  DEFAULT NEW REGIME, அதாவது நீங்கள் பழைய முறையை தொடர்கிறீர்கள் எனில் விருப்ப கடிதம் வழங்க வேண்டும், நீங்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனில் புதிய முறைப்படி வருமான வரி கணக்கிடப்பட்டு பிடித்தம் செய்யப்படும். இதுவே DEFAULT REGIME எனப்படுகிறது

(புதிய முறைக்கு எந்த ஒரு இணைப்புகளும் தேவை இல்லை /attachments like rent receipt, Home loan certificate, LIC/PLI premium receipt, children tution fees receipt, etc not required 🤪.

 

4) New regime இல் refund எதுவும் வாங்க இயலாது என்கிறார்களே ?

தவறான கருத்து.

Old regime / New regime அதற்கும் refund க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. எதிர் பாராத விதமாக கூடுதலாக கட்டிய வருமான வரி தொகையை Individual e-filing (ITR) மூலம் திரும்ப பெறலாம், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

வரும் காலங்களில் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை பயன்படுத்த போவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது

DDOs முறையாக 24q TDSEE-FILINGசெய்தால் மட்டுமே EMPLOYEES கணக்கில்  வருமான வரி கட்டிய தொகை சரியாக வரவு செய்யப்படும்.

5) DDOs 24q TDS e-filing ன்றால் என்ன?

நமது மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானம் வரி  நேரடியாக நமது PAN மூலம் மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு செலுத்தப்படுவது இல்லை 

தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் மொத்த வருமான வரி தொகையை மத்திய அரசு கணக்கில் Book adjustment ஆக செலுத்துகிறது

மாவட்ட மொத்த தொகை DTO, AIN கணக்கில் வரவு செய்யப்படும். (தனி நபருக்கு PAN, DDO க்கு TAN, அதுபோல மாவட்ட கருவூல அலுவலருக்கு Accounts office Identification Number எனப்படும் AIN)

DTO, மாத மாதம் 24G சமர்பிப்பார் அப்போது தான் அந்த தொகை நமது பள்ளி/அலுவலகம் TAN number இல் வரவு செய்யப்படும்.

Book Adjustment, 24G மாதந்தொரும் சரியாக சமர்பிக்கப்படுகிறது பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் 

DDOs, மூன்று மாதத்திற்கு ஒரு முறை TDS e-filing செய்ய வேண்டும்

 

அதாவது TAN இல் உள்ள தொகை தனிநபர் PAN இல் அப்போது தான் வரவு செய்யப்படுகிறது

 

ஒவ்வொரு காலாண்டும் இதை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்

 

காலாண்டு கணக்கு தாக்கல் என்பதால் இது 24q (quater) எனப்படும்.

 

நிதி ஆண்டு 1/4 தான் துவக்கம்..

 

q1- first quarter

April, May, June

E-filing last date July 31 

 

q2- Second quarter

July, August, September 

E-filing last date Oct 31 

 

q3- Third quarter

October, November December 

E-filing last date Jan 31 

 

q4- fourth quarter

January February March

E-filing last date May 31

 

ஒவ்வொரு பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கட்டாயம் TDS e-filing 24 q உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.  தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ரூபாய் 200 அபராதம்

 

24q சரியான நேரத்தில் சரியான முறையில் தாக்கல் செய்தால் மட்டுமே பணியாளர்தம் கணக்கில் வருமான வரி பிடித்த தொகை முறையாக சென்றடையும்

 

 BIN view சரி பார்த்த பிறகு e-filing செய்தால் தவறு நிகழாது 👍🏼

 

 6) அடுத்த முறை (2024-25) இதே மாதிரி தான் old regime New regime இருக்குமா?

 

எது கூடுதல் பலன் தரும்?

 

வரி விதிப்பில் மாற்றம் வருமா?

 

என்ன என்ன சலுகைகள் இருக்கலாம்

 

விடை

இந்த வருடம் (2024-25) வருமான வரி உச்ச வரம்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை )

 

 வரி

 

7) இந்த ஆண்டு 2023-24 வருமான வரி (பழைய முறையில்) மருத்துவ செலவினங்கள் எந்த பிரிவின் கீழ் எவ்வளவு தொகை கழிக்க இயலும்?

 

 சுருக்கமாக .

 

 80 D  மருத்துவ‌ காப்பீடு ( NHIS ) மற்றும் பிற‌ காப்பீடு அதிகபட்சமாக 25000 /- கழித்து கொள்ளலாம்.

 

Preventive Health checkup 5000 வரை இந்த பிரிவில் கழித்து கொள்ளலாம்

 

 80DD .

உங்களைச் சார்ந்தவர்கள் மாற்றுத் திறனாளி எனில் அவர்களுக்கான மருத்துவ பராமரிப்பு செலவுகள்

 80% வரை  ஊனம் எனில் 75000/-

 80% அதிகம் எனில் 1,25,000/-

(மருத்துவ சான்றிதழ் படிவம் 10-IA கட்டாயம் இணைக்க வேண்டும்

 

(பணியாளர் மாற்றுத் திறனாளி எனில் 80U பிரிவு)

 

 80DDB

பணியாளர் மற்றும் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவ செலவினங்கள்

 40000 / வரை

மூத்த குடிமக்கள் எனில் 1,00,000/- வரை.

 

மருத்துவ சான்றிதழ் படிவம் 10-I கட்டாயம் இணைக்க வேண்டும்..

 

(தொகை ரொக்கமாக செலுத்தி இருக்கக் கூடாது ) 

 

 நோய்களின் பட்டியல் 

 

1) Neurological disease 

2) Malignant Cancer

3) AIDS

4) chronic renal failure

5) Hematological disorders 

 

please click here to download 80 ddb certificate format

 

மேற்கண்ட நோய்களுக்கான சிகிச்சை செலவு மட்டுமே அனுமதி

 

காய்ச்சல், தலைவலி, பல்வலி, Maternity expenses, Heart operation, accident medical expenses எதற்கும் இந்த பிரிவில் கழிக்க இயலாது. 

 

 80D vs 80DDB 

 

 80D - வருமுன் காக்கும் செலவு

 

 80DDB - வந்தபின் காக்கும் செலவு ( குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும்) 

 

 80U vs 80DD 

 

 80U - பணியாளரே மாற்றுத் திறனாளி எனில்

 

 80DD - பணியாளரை சார்ந்தவர் மாற்றுத் திறனாளி எனில்.

 

 

8) HRA, home loan deduction இரண்டையும் ஒன்றாக கழிக்க இயலுமா

 

 சில நிகழ்வுகளில் கழிக்க இயலும் 

 

உதாரணமாக சொந்த வீடு சாத்தூரில் இருக்கிறது..

பணிபுரிவது இராமநாதபுரம் மாவட்டத்தில்

அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார் எனில் இரண்டையும் ஒன்றாக கழிக்க இயலும்

 

 HRA 

Sec 10 (13a) இன் படி 

(செலுத்தும் வாடகை -10% ஊதியம்)

பெறப்பட்ட HRA தொகை இதில் எது குறைவோ அதைக் கழித்து கொள்ளலாம் ..

 

செலுத்தும் வாடகை மாதம் 8335 க்கு மேல் அதாவது வருடம் 1,00,000 /- க்கு மேல் எனில் வீட்டின் உரிமையாளர் PAN + வாடகை இரசீது கட்டாயம் இணைக்க வேண்டும்

 

வாடகை தொகை ஆண்டிற்கு 1,00,000/- க்கு உள் எனில் வீட்டு வாடகை இரசீது மட்டும் வைத்தால் போதும்

 

 வாடகை வீட்டின் முகவரி ஊர் மற்றும் சொந்த வீட்டின் முகவரி ஊர் ஒரே ஊராக இருக்க கூடாது 🙏

 

 சொந்த வீட்டில் இருந்து கொண்டு வாடகை வீட்டில் இருப்பதாக வாடகை இரசீது வைப்பது தார்மீக அடிப்படையில் சரியல்ல .

 

1,00,000/- மேல் வாடகை தருவதாக இரசீது+ PAN  copy தரும் போது

 

அந்த PAN க்கு இந்த வாடகை தொகை வருமானமாக சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

 

Home loan interest secTION 24 இன் படி 

அதிகபட்சமாக 2,00,000 /- வரை கழித்துக் கொள்ளலாம்

 

Home loan அசல் தொகை sec 80C இல் கழித்து கொள்ளலாம் என்பது நீங்கள் அறிந்ததே

 

இவை எல்லாம் (HRA, Home loan) old regime இல் மட்டுமே கழிக்க இயலும்.

 

New regime இல் இந்த பிரச்சினை எழாது 🙏

 

9) Home loan interest Rs. 2,00,000/- மேல் கழித்து கொள்ளலாம் என்கிறார்களே? சாத்தியமா?

 

 ஆம்

Sec 80EE , 

sec 80EEA நிபந்தனைகளுக்கு உட்பட்டு கழித்துக் கொள்ளலாம் 

 

Home loan interest sec 24 இன் படி 

அதிகபட்சமாக 2,00,000 /- வரை தான் கழித்துக் கொள்ளலாம்

 

Sec 80EE .

 

இதில் 2L, விட கூடுதலாக 50,000 வரை கழித்துக் கொள்ளலாம்.

 

 நிபந்தனைகள் 

 

1) 2013-14,2014-15 அறிமுகம் பிறகு மீண்டும் 2016-17 மறுபடியும் அறிமுகம்

 

கடன் 1/4/2016-31/3/17 க்குள் வாங்கி இருக்க வேண்டும்

 

2) அதிகபட்சம் வீட்டின் மதிப்பு 50L . கடன் 35L 

 

3) முதல் வீடாக இருக்க வேண்டும்..

 

 80EEA

 

இந்த பிரிவு 2019-20 இல் அறிமுகம்

 

இதில் கூடுதலாக 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்.

 

 Affordable homes -key point 😁

 

 நிபந்தனைகள் 

 

1) கடன் தொகை 1/4/2019-31/3/2022 க்குள் வாங்கி இருக்க வேண்டும்.

 

2) முதல் வீடாக இருக்க வேண்டும்

 

3) வீட்டின் மதிப்பு 45L க்குள் இருக்க வேண்டும்.

 

4) வீட்டின் carpet area அதிகபட்சமாக

 645 ச.அ (பெரு நகரங்களில்) 

 968 ச.அ மற்ற நகரங்களில் இருக்க வேண்டும் .

 

5) வீட்டு கடனுக்கு மட்டுமே இது பொருந்தும்

 

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு 80EEA இல் 2L விட அதிகமாக 1,50,000 வரை வட்டித் தொகையை கழித்து கொள்ளலாம்

 

80EE, 80EEA இரண்டிலும் 50k+150k சேர்த்து கழித்து கொள்ளலாமா?

 

இயலாது

 

 Logical ஆக. 

 

 80EE வீட்டு கடன் என்றால்(1/4/2016-31/3/2017)

 

80EEA  முதல் வீடாக இருக்க முடியாது 😁

 

 இரண்டாவது வீட்டிற்கு இந்த பிரிவில் இடம் இல்லை 🤪

 

 வரி 10 

 

குழப்பங்கள் நிறைந்த.. CPS 

 80CCD பற்றிய பதிவுகள்

 

10) 80ccd (1b) CPS கூடுதல் 50000 கழிக்கலாமா?

 

நாம் கழிக்கலாம்

 

#i support 80 CCD (1B) 

 

சற்றே நீண்ட நெடிய பதிவு தங்களின் புரிதலுக்கு

 எனது பார்வையில்

 

Income tax பிரிவுகள் 

 

 Sec 80CCD .

 

மத்திய/மாநில அரசு ஊழியர்கள் NPS/CPS திட்டத்தில் ஊதியத்தில் கட்டாயப் பிடித்தம் 10% (pay+DA) 

 

Income tax deduction allowed max limit 1,50,000 ( including 80C ) Sec 80CCD (1B) 

 

 Voluntary deduction

விருப்பத்தின் பேரில் கூடுதலாக NPS/ CPS ( tier 1 ) கணக்கில் 50,000 வரை பிடித்தம்

Sec 80CCD (1B) இல் கூடுதலாக 50,000 வரை கழிவு 

 இது 80ccd+80C 

1,50,000 க்கு மேல் உள்ள பிரிவு

 

 Sec 80CCD (2) 

 

இது மத்திய/மாநில அரசு நாம் NPS/CPS செலுத்தும் தொகைக்கு ஈடாக அரசு நமது கணக்கில் செலுத்தும் தொகை (அதிகபட்சமாக 10% மட்டுமே)

 

 80ccd2 மட்டும் பழைய முறை /  புதிய முறை (New regime) இரண்டிலும் இருக்கிறது

 

( 80ccd, 80ccd (1b) old regime only, not allowed in new regime..) 

 

ஆனால், (80ccd2 )இந்த தொகை நமது வருமானத்தில் சேர்த்து பிறகு கழித்துக் கொள்ள வேண்டும்

 

அதாவது நமது ஆண்டு வருமானம் 10,00,000 ..

 

நாம் CPS இல் செலுத்திய தொகை 85,000 எனில் 

அரசு பங்களிப்பு தொகை 85,000  ஆக மொத்தம் வருமானம்

 10,85,000

 

இதில் 85,000 த்தை 80ccd2 கழித்துக் கொள்ளலாம்

 

தற்போது வருமானம் 10,00,000

 

முதலிலேயே இது தான் இருந்தது ☺️

 

அதனால் தான் பொதுவாக நாம் 80ccd2 பயன்படுத்துவது இல்லை.

 

மேற்கண்டவை தான் NPS / CPS தொடர்பான மூன்று பிரிவுகளாக வருமான வரி சட்டத்தில்

 பல ஆண்டுகளாக இருக்கிறது

 

 திடிரென்று ஏன் இந்த குழப்பம்?

 

1) தஞ்சாவூர், திருப்பூர், கோவை (எனக்கு தெரிந்த வரையில்) வருமான வரித்துறை சார்பாக DDO meeting தகவல்

 

2) வாட்ஸ் அப் வைரல் msg. 

 வருமான வரி தொடர்பான புதிய தகவல் 

என ஆரம்பிக்கும் பதிவு 😁

80ccd கூடுதல் கழிவு 50000 இந்த ஆண்டு கிடையாது .. ஆடிட்டர் தகவல் , வருமான வரித்துறை நோட்டீஸ்

 

3) ஒரு சங்கத்தின் புகைப்படத்துடன் கூடிய பதிவு

 திருச்சி வருமான வரி இணை ஆணையரை சந்தித்தோம். 

 

80ccd (1b) 50,000 கூடுதல் கழிவு கிடையாது என அவரும் சொன்னார்  

 

4) இவை 

 உண்மையா 

உண்மையா என கேட்டே இதை வைரலாக்கிய நம்மவர்கள்

 

நிற்க.

 

இவற்றுக்கு நேர்மாறாக 

 

80ccd (1b)  50000 இருக்கிறது என்பதற்கு சான்றாக

கருவூலத்தின் RTI கடிதம் 

 2017 திருச்சி IT department RTI letter

 Latest news என 2/ 2024 திருப்பூர் IT department RTI letter ..

 

இப்படி மாறி மாறி பதிவுகள் 🧐

 

இல்லை என்பவர்கள் அடிப்படை வாதம்

 

இது NPS க்கு மட்டுமே மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்🙏

 

 80ccd vs 80ccd (1b) 

 

80ccd- 2003-2004 க்கு பிறகு நியமனம் எனில் கட்டாயம்

10% (pay+da) ..

 

இந்த தொகைக்கு ஈடாக அதே தொகை 10% மாநில அரசு செலுத்தும் (சில மாநிலங்களில் 12% )

 

மத்திய அரசு அவர்கள் ஊழியர்களுக்கு 14% செலுத்துகிறது .

 

ஆம் உண்மை தான்

(பலருக்கு இது அதிர்ச்சி தகவலாக இருக்கும் 😁).

 

 80ccd 1b - இது கூடுதல் பிடித்தம்

அதாவது ஒரு மத்திய அரசு ஊழியர் அவரின் DDO விடம் கடிதம் எழுதி கொடுத்து எனது ஊதியத்தில் 80ccd 1b tier 1 கணக்கில் வரவு செய்ய கூடுதலாக 50000 வரை பிடித்தம் செய்யப்படும் நிகழ்வு

 

இதற்கும் வழக்கமான பிடித்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் .

 

1) இது (tier 1) கட்டாயம் கிடையாது ( non mandatory, it's purely voluntary)

 

2) இதற்கு ஈடான தொகையை மத்திய அரசு செலுத்தாது .

 

3) NPS /CPS tier 2 account இல் செலுத்தும் தொகைக்கு 80ccd 1b விலக்கு கோர இயலாது.

 

(Tier 2 account - non mandatory, purely market related investment purpose)

 

 

🙏

நீங்கள் ஏன்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

 80ccd 1b, 50000 கழிக்க ஆதரவு என சொல்கிறீர்கள்

 

1) இது NPS க்கு மட்டுமே, நமக்கு கிடையாது என வருமான வரித்துறையில் சிலர் சொல்லுவதற்கு காரணம் நீங்க pfrda வில் இதுவரை இணையவில்லை

அது பணியாளர் பக்கம் தவறில்லை 

 

2) நமது CPS அரசாணை படி ஊதியம்+அகவிலைப்படி இவற்றில் 10% சதவீதம் மட்டுமே பிடித்தம் செய்ய இயலும். ( ஊழியர் 50000 கூடுதலாக பிடிக்கச் சொல்லி கடிதம் கொடுத்தாலும் பிடிக்க இயலாது. இதுவும் ஊழியர் குற்றம் கிடையாது.

 

3) சரி அஞ்சலகம், வங்கிகளில் போய் புதிய NPS tier 1 account துவங்க வேண்டியது தானே

அதுவும் இயலாது ஒருவருக்கு ஒரு CPS/NPS number மட்டுமே இருக்க முடியும்.

 

4) அதே போல், இந்த ஆண்டு 80ccd 1b கழிக்க கூடாது என எந்த ஒரு தனி சுற்றறிக்கை எதையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை

 

 கடந்த ஆண்டுகளின் நடைமுறையே தொடர்கிறது

அடுத்த ஆண்டிற்கும் 2024-25 80ccd 1b மாற்றம் இன்றி தொடர்கிறது.

 

5) சிலர் நாம் pfrda வில் இணையாத காரணத்தால் தமிழக cps க்கு 80 CCD 1B பொருந்தாது. மத்திய அரசு NPS க்கு மட்டுமே பொருந்தும் என்கிறார்கள் 🧐

 

அப்படி என்றால் நான் அவர்களிடம் கேட்கும் சந்தேகம்..

அப்ப நமது CPS செலுத்தும் தொகை ( சேமிப்பு பிரிவில் 80C )1,50,000 வரை கழித்துக் கொள்ள எப்படி அனுமதி உள்ளது

 

6) 80ccd, 80ccd 1b விதி என்ன‌ சொல்கிறது

 

 ஒரே தொகையை இரண்டிலும் கழிக்க கூடாது. 

 

ஆம் நாமும் நமது சேமிப்பு + cps பங்களிப்பு 1,50,000 விட கூடுதலாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே

 

கட்டிய CPS தொகையில் , கூடுதல் தொகையை 

 பிரித்து 50000 வரை  , 80ccd 1b இல் காட்டுகிறோம்

 

 எனது புரிதல் தங்களுக்கு ஓரளவு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன் 🙏

 

 நிறைவாக 

 

 DDO சகோதர சகோதரிகளுக்கு

 இந்த ஆண்டு 80ccd 1b சார்ந்து எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை கடந்த ஆண்டு நடைமுறை தான்.

 

CPS தொகையை சேமிப்பு கணக்கில் 1,50,000 கழிக்க அனுமதிக்கிறோம் எனில் கூடுதல் தொகை 50000 யும் அனுமதிக்கலாம் .

 

(நீங்கள் தயக்கம் காட்டுவது போல் ஒருவேளை  income tax notice வந்தாலும் அது அந்த தனிநபரையே சாரும்) 👍🏼

 

(எனது ஆசிரியர்களுக்கு நான் 80ccd 1b 50,000 அனுமதிக்கிறேன் )🙏

 

 ஆசிரிய சகோதர சகோதரிகளே. 

 

சில இடங்களில் தங்களின் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் (DDO) 

(DEO (நிதி உதவி பெறும் பள்ளிகள்), BEO, HM ) 80ccd 1b இல் கழிக்க அனுமதி மறுத்தார்கள் எனில், no problem . 

தற்போது வருமான வரி செலுத்தி விடுங்கள் 

 

DDO விடம் இருந்து TRACES website இல் இருந்து முறையாக பதிவிறக்கம் செய்யப்பட்ட

 Form 16 வாங்கிக் கொள்ளுங்கள் 

 

 Individual e-filing  ITR return தாக்கல் போது , இந்த 50000 தொகையை 80ccd 1b இல் காண்பித்து நீங்க refund வாங்கிக் கொள்ளலாம்.

 

 இரண்டு தரப்பு 

 விளக்கங்களையும் நீங்க புரிந்து கொள்ள

 ஒரளவு முயற்சி செய்து உள்ளேன் 🤪

 

இவை அனைத்தும் பழைய முறையில் ( old regime) மட்டுமே

 

எதற்கு இவ்வளவு தொல்லைகள் மற்றும் குழப்பங்கள் ☺️

எந்த attachments, std deduction 50,000 தவிர

extra deduction இல்லாத new regime (sec 115 BAC) எனக்கு benifit ஆக இருக்கிறது ( tax குறைவாக வருகிறது ) எனில் தாராளமாக புதிய முறைக்கு மாறிக் கொள்ளுங்கள் 😁

 

(அரசின் நோக்கமும் அது தான் போல் தெரிகிறது ) 

 

பழைய முறைக்கு எந்த ஒரு சலுகையும் வழங்காமல், புதிய முறையில் std deduction, tax rate change என பல சலுகைகள்

🙏

 

 வரி 11.. 

 

11) இந்த 80ccd 1b section 50,000 , CPS/NPS பணியாளருக்கு மட்டும் தானா? 1/4/2003 க்கு முன் பணியில் சேர்ந்த GPF பணியாளருக்கு பொருந்துமா?

 

( Your mind voice மறுபடியும் முதலில் இருந்தா 😁) 

 

🤣🤪😁 CPS க்கே இருக்கா இல்லையா என பிரச்சினை போய் கொண்டு இருக்கு .

இதுல GPF? ஊழியர்களுக்கு 🤔

 

ஆம் GPFபணியாளர்கள்

சுய தொழில் முனைவோர்,

 

IT employees, 

 

தனியார் நிறுவன ஊழியர் என எல்லோரும் இந்த 80 CCD 1B கீழ் பலன் பெறலாம் 

அவர்கள் செய்ய வேண்டியது

 

 அஞ்சலகம் / நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் / சில தனியார் வங்கிகள்/ அல்லது online e-nps portal

 

மூலமாக புதிய NPS கணக்கினை துவக்கலாம்.

அதில் tier 1 account இல் 50,000 முதலீடு செய்து 80ccd 1b இல் வரிச் சலுகை பெறலாம்

 

NPS tier 2 account முதலீடு நோக்கம் மட்டுமே அதற்கு வரிச் சலுகை கிடையாது 🙏

 

இது சார்ந்த கூடுதல் விவரங்களுக்கு.

 

இருக்கவே இருக்கிறது

 Google 😁

 

 

 வரி 12 

 

12) income tax rebate sec 87 A என்றால் என்ன?

 

நேற்று முன்தினம் unknown number இல் இருந்து ஒர்  ஆசிரியரின் சந்தேகம்

 

New regime.. 7 இலட்சம் வரை வரி கிடையாது 

 

இந்த ஆண்டு எனக்கு 10 லட்சம் ஆண்டு வருமானம் வருகிறது அப்படி எனில் நான் கூடுதலாக அந்த 3 இலட்சத்திற்கு மட்டும் வரி கட்டினால் போதும் தானே

இதை எங்கள் தலைமை ஆசிரியர் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்

 

தொலைபேசி எண் தந்து உங்களிடம் விளக்கம் கேட்கச் சொன்னார் 🙏

 

 பழைய முறையில்

 

Taxable income 5 L வரையில் இருந்தால் 

Tax வராது என்போம்

 

ஆம் 

 

உண்மையில் 2.5 L வரையில் தான் NIL tax, அதற்கு மேல் எனில் tax உண்டு

 

ஆனால் உங்கள் வருமானம் 5 இலட்சத்திற்குள் எனில் sec 87A படி rebate வழங்குகிறார்கள்

அதிகபட்சமாக 12,500 /- 

அப்படி எனில் 

Tax உண்டு

Rebate உண்டு

 

எனவே tax கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாது .

 

Taxable income= 5,00,000 

 

Tax = 12,500

 

Rebate 87 A= 12500

 

So tax payable= zero..

 

ஆனால் taxable income= 5,00,100 எனில்

 

Tax = 12500+ 20= 12520

 

Cess = 501

 

So total tax payable= 13021/- 

 

Rebate= nil

 

 100 ரூபாய் கூடுதலாக வாங்கியதற்கு 13021 வரி கட்டும் நிலை 🤪

 

 New regime 

 

இதிலும் sec 87 A , rebate allowed 

Upto 7,00,000/-

 

அதாவது 3,00,000 வரை nil tax

 

Taxable income= 7,00,000 எனில்

 

Tax = 15,000+10,000= 25,000 

 

Rebate= 25,000 

 

So tax payable = zero

 

(இதைத் தான் TV/paper/media news 7L வரை tax கிடையாது என்கிறார்கள்

 

சந்தேகம் கேட்க ஆசிரியர்

ஆண்டு வருமானம் 10L  எனில்

 

std deduction 50,000/-

 

Taxable income 9,50,000 /-

 

Tax = 15000+30000+7500

= 52500+cess 4%

 

Rebate= zero .

 

🙏 7L வரை tax கிடையாது என்பதை சரியாகச் சொன்னால்

 

3L வரை tax கிடையாது 

7L வரை எனில் வரிச் சலுகை உண்டு. 👍🏼

 

இந்த வரிச் சலுகை தான் sec 87A எனும் பிரிவு

 

வரி 13

 

13) இந்த வரிச் சலுகை (rebate under sec 87 A ) பெற எதேனும் படிவம்/இணைப்பு தேவையா?

 

 எதுவும் தேவையில்லை

கணக்கீடு மட்டும் போதும் 

 

 வரி 14.. 

 

14) உங்கள் income tax calculation sheet இல் 7,27,770 /- வரை rebate 87A ammended 

என சொல்லி உள்ளீர்கள் அது என்ன?

 

கடந்த ஆண்டு 1/2/23 அன்று budget

 

 மார்ச் 2023 இல் நிதி அமைச்சர் amendment bill submitted in parliament

 

அதில் தான் 87A பிரிவில் திருத்தம் வெளியிடப்பட்டது

 

தங்களின் பார்வைக்கு திருத்தத்தை இணைத்துள்ளேன்

 

அது என்ன திருத்தம் ?

 

புதிய முறையில் 7L வரை எனில் tax கட்ட வேண்டாம்.

 

7,00,100 எனில்

25000+10= 25010/-

அதற்கு cess 4% 1000

 

100 கூடுதலுக்காக 26010 செலுத்த வேண்டும் என்பது பெரிய பாதிப்பு தானே 

 

எனவே திருத்தத்தை கொண்டு வருகிறார்

 

அதாவது 7,00,010 முதல் 7,27,770 வரை rebate 

 25,000 இருந்து படிப்படியாக குறைந்து வரும்.

 

7,27,780 க்கு மேல் taxable income எனில் 87A rebate கிடையாது ..

 

 Rebate= (tax calculated - amount above 7L)  

 

பணியாளரின் ஆண்டு வருமானம் 

 7,50,000 /- முதல் 7,77,770 /- வரை எனில் 

சற்று கவனமாக வரி கணக்கீடு செய்யுங்கள் (rebate 87A உள்ளது)

 

இதை வலியுறுத்தி சொல்ல காரணம் 

 

கடைகளில் கிடைக்கும் சில  Income tax form , 

 

சில income tax Excel automatic calculation sheet/ program இல் 

 

 7,00,000 /- வரை உள்ள வரிச் சலுகையை தான் சொல்லி உள்ளார்கள்

 

மார்ச் 2023 இல் திருத்தப்பட்ட 7,27,770/- வரை உள்ள

வரிச் சலுகையை, ( 87A ammended details) கவனிக்காமல் இருப்பதாக தெரிகிறது.

 

Taxable income 7,27,780 க்கு மேல் எனில் வழக்கமான கணக்கீடு தான். மாற்றம் எதுவும் இல்லை

Mr. Selvakumar K

Head Master

GHSS M Subbulapuram 

Madurai 

17/2/2024

  

Post a Comment

Previous Post Next Post