தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான MRB செவிலியர்கள் பல வருடங்களாக ஒரு முக்கியமான கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
“ஒரே அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு, மகப்பேறு விடுப்பில் ஏன் வேறுபாடு?”
தமிழ்நாடு அரசு நிரந்தர பணியாளர்களுக்கு ஒரு வருடம் (12 மாதங்கள்) மகப்பேறு விடுப்பு வழங்குகிறது. ஆனால் அதே அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் MRB மற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு இதே உரிமை முழுமையாக வழங்கப்படவில்லை என்பது சமூக நீதி (Social Justice) குறித்து கேள்விகளை எழுப்புகிறது
புதிய அரசு ஆணை – G.O.(Ms).No.81 (05.03.2026)
தமிழ்நாடு அரசு 05.03.2026 அன்று G.O.(Ms).No.81 என்ற அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.
இந்த அரசு ஆணையின் மூலம்,
National Health Mission (NHM) கீழ் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு 26 வாரங்கள் (6 மாதங்கள்) மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் இருக்கும் சமூக நீதி பிரச்சனை
இந்த அரசு ஆணை மூலம் ஒரு முன்னேற்றமான முடிவு ஏற்பட்டாலும், இன்னும் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது.
நிரந்தர அரசு ஊழியர்கள்
மகப்பேறு விடுப்பு : 12 மாதங்கள்
MRB / NHM / ஒப்பந்த செவிலியர்கள்
மகப்பேறு விடுப்பு : 26 வாரங்கள் (6 மாதங்கள்)
அதாவது,
ஒரே அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இரண்டு விதமான உரிமைகள்.
இது சமூக நீதி (Social Justice) மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து முக்கியமான விவாதத்தை உருவாக்குகிறது.
செவிலியர்களின் பணி மற்றும் தியாகம்
செவிலியர்கள் ஒரு சாதாரண வேலை செய்யும் ஊழியர்கள் அல்ல.
அவர்கள்:
24 மணி நேர மருத்துவ சேவை வழங்குபவர்கள்
நோயாளிகளின் உயிரைக் காக்கும் முக்கிய சுகாதார பணியாளர்கள்
குடும்பத்தையும் பணியையும் சமநிலைப்படுத்தும் பெண்கள்
இத்தகைய பணியில் இருக்கும் பெண்களுக்கு முழுமையான மகப்பேறு பாதுகாப்பு வழங்குவது அரசு பொறுப்பு.
சமூக நீதி அடிப்படையில் தேவையான மாற்றம்
தமிழ்நாடு சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தும் மாநிலமாகும்.
அதனால்,
அரசு எதிர்காலத்தில் பின்வரும் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்:
சீருடைப்படி
தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நிரந்தர செவிலியர்களுக்கு சீருடை பட்டி வழங்கும் அதே நேரத்தில் எம்ஆர்பி செவிலியர்களுக்கு சீருடை பிடி வழங்கப்படுவதில்லை
இதனால் எம்ஆர்பி செவிலியர்கள் சீருடை அணியாமல் பணிபுரியாமல் இருப்பதில்லை அவர்களும் சீருடை அணிந்து பணிபுரிந்து வருகிறார்கள் எனவே எம்ஆர்பி செவிலியர்களுக்கும் சீருடை படி ரூ 6000/- வழங்கிட அரசு ஆவன செய்ய வேண்டும்
MRB செவிலியர்களுக்கும் 1 வருட மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்
ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் இடையிலான பாகுபாட்டை நீக்க வேண்டும்
G.O.(Ms).No.81 மூலம் ஒப்பந்த செவிலியர்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது ஒரு முன்னேற்றமான முடிவு.
ஆனால்,
நிரந்தர அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் 1 வருட மகப்பேறு விடுப்பை MRB செவிலியர்களுக்கும் வழங்கும் வரை சமூக நீதி முழுமையாக நிறைவேறாது.
தமிழ்நாடு மருத்துவ துறையில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் ஒரே உரிமை, ஒரே பாதுகாப்பு, ஒரே மரியாதை வழங்கப்பட வேண்டும்.
ம உமாபதி