Skip to main content

மருத்துவ கல்வி இயக்ககம்

“மனிதவள மேம்பாட்டையும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவது தமிழக அரசின் (Tamilnadu Government) முக்கிய குறிக்கோளாகும்,”

இவை மக்களின் மனநலம், உடல்நலம் பொறுத்தே அமைகிறது, இதற்கு சுகாதார முன்னேற்றம் அடிப்படையாக விளங்குகிறது,

சுகாதார மேம்பாட்டிற்காக மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களை உருவாக்குவதில் மருத்துவக் கல்வி துறை முக்கிய பங்காற்றுகிறது

மருத்துவ சேவைகள் இயக்ககத்தில் (Directorate of Medical Services) இருந்து மருத்துவ கல்வி இயக்ககம்(Directorate of Medical Education) 1966 ஆண்டு தனிமை படுத்தப்பட்டு கடந்த 44 வருடங்களாக இயங்கி வருகிறது

இதன் கீழ் மருத்துவ கல்லூரிகளும், கற்பித்தல் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன

மருத்துவ கல்வி இயக்குனகரம்(Directorate of Medical Education), கல்லூரிகளிலும்,பிணியாளர் கவனிப்பிலும், கல்வி வளர்ச்சி, பயிற்சி உதவி,மற்றும் ஆராய்ச்சி அடிப்படை அமைக்க பொறுப்பு உடையது

மருத்துவ கல்வி இயக்குனகரகத்தின் பணிகள்
  • மருத்துவம், பல் மருத்துவம், செவிலியம் (Nursing), மற்றும் மருத்துவம் சார்ந்த கல்விகளின், கல்வி முறையை கண்காணிப்பது,
  • மருத்துவ கல்வி இயக்குனகரத்தின் கீழ் வரும் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகளை கண்காணிப்பது
  • தனியார் மருத்துவ,பல் மருத்துவ, செவிலிய, மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை ஒழுங்கு படுத்துதலும்,
  • முதுநிலை பட்ட மற்றும் பட்டய படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது ஆகும்

அரசு போக்குவரத்து கழகத்தால் (Tamilnadu State Transport Corporation) நடத்தப்படும் பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் மொத்தம் 60 இடங்கள்

அதில் 40 இடங்களுக்கு அனுமதி அளிப்பது மருத்துவ கல்வி இயக்குனகரத்தின் பணி ஆகும்

11 அரசு மருத்துவ கல்லூரிகளும்
02 தனியார் மருத்துவ கல்லூரிகளும்
01 அரசு பல் மருத்துவக்கல்லூரியும்
07 தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளும்
40 அரசு மருத்துவமனைகளும்
மருத்துவ கல்வி இயக்குனகரத்தின் கீழ் இயங்குகிறது

நன்றி:

மருத்துவ கல்வி இயக்குனகரம்

Comments

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms