பட்ட செவிலியர் படிப்பிற்கான தகுதி பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன Post Basic Nursing Merit List and Counseling Schedule Announced

பட்டய படிப்பு முடித்து பட்ட படிப்பு படிப்பதற்கான விண்ணப்பதாரர்களில் தகுதியுடைவர்களின் பெயர்பட்டியல் மற்றும் பட்ட படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நாட்கள் தமிழ்நாடு சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது


பட்டய படிப்பு முடித்த செவிலியர்கள் (Diploma Nursing), பட்ட படிப்பு படிப்பதற்கான (Post Basic BSc Nursing), அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களை நிறப்புவதற்கான கலந்தாய்வுகள் வரும் 15.09.2011 முதல் துவங்குகின்றன, கலந்தாய்வுகளில் பங்குபெற உள்ளவர்களின் தகுதி பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அனைத்து உண்மை சாண்றிதழ்களுடன் கீழ்காணும் அட்டவணைப்படி தகுதியான நாள் மற்றும் நேரத்தில் கலந்தாய்வுகளில் கலந்து கொள்ளலாம் என இணையதளத்தில் தெரிவித்து உள்ளனர்



விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு நடைபெறும் நாளில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கலந்தாய்வு கூடத்தில் இருக்க வேண்டும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது, கலந்தாய்வு கடிதம் கிடைக்கப்பெறாத தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் அவருடைய தகுதிக்கான (Community Rank ) கலந்தாய்வு நடைபெறும் நாளில் கலந்து கொள்ளலாம்

தமிழக அரசில் பணிபுரியும் செவிலியர்கள் தனியார் கல்லூரிகளில் உள்ள இடத்தில் படிக்க விரும்பினால் அவர்களுக்கு ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்கப்பட மாட்டாது, மேலும் அவர் படிப்பிற்கான விடுப்பு தகுந்த துறை தலைவரிடம் பெற்று பட்ட படிப்பு படிக்க செல்ல வேண்டும.என மேலும் தெரிவித்து உள்ளனர்


Tags: PostBasic BSc Nursing, Post Basic BSc Nursing In Tamilnadu, Post Basic BSc NursingColleges, Post Basic BSc Nursing Admission 2011, Post Basic BSc Nursing Course,Post Basic BSc Nursing Courses Chennai, Post Basic BSc Nursing Counseling, PostBasic BSc Nursing Merit List, Post Basic BSc Nursing Merit List 2011

Post a Comment

Previous Post Next Post