"ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்திடுக!"
தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு (TNMPA) வேண்டுகோள்

தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவைருக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு (TNMPA) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து இவ்வமைப்பின் மாநில தலைவர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்  அவர்கள் விடுத்துள்ள செய்தி வெளியீடு 

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் 6000 ற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ. 4500 ம், இரண்டாம் ஆண்டில் ரூ. 5500 ம், மூன்றாம் ஆண்டில் ரூ. 6000 ம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. 

அனைத்து பொருட்களின் விலைவாசியும் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில் மிக மிக குறைவான தொகுப்பூதியத்தில் பணிபுரியும் இச்செவிலியர்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர் 

எனவே தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவைருக்கும் உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பின் செய்தி வெளியிடு 5 comments:

muthu meena said...

தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்புக்கு தொகுப்பூதிய செவிலியர்களின் நன்றி.

manimaraqn said...

THANKS FOR TNMPA

manimaraqn said...

thanks for our TNMPA

boi said...

THANKS FOR TNMPA AND ALL

Ponnuvel Subramaniam said...
This comment has been removed by the author.

Post a Comment

 
l
j