மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்

 1  திட்டத்தின் பெயர்:-
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.

2  திட்டத்தின் நோக்கங்கள்:-
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.

3  வழங்கப்படும் உதவி:-
திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

4  பயன் பெறுபவர்கள்:-
ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம்.  பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.

5  தகுதிகள் / நிபந்தனைகள்:- 
அ) கல்வித் தகுதி

திட்டம் 1 
1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .

2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.
 
3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.

திட்டம் 2 
1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். 

2. பட்டயப் படிப்பு (Diploma Holders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

ஆ) வருமான வரம்பு  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இ) வயது வரம்பு  திருமண தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

ஈ) இதர நிபந்தனைகள்  ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.

உ)விண்ணப்பிக்க வேண்டிய  கால அளவு  திருமணத்திற்கு 40 நாட்களுக்குமுன் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

6  அணுக வேண்டிய அலுவலர்:-
1. மாநகராட்சி ஆணையர் ( மாநகராட்சிப் பகுதிகளில்) 
2. நகராட்சி ஆணையர் (நகராட்சிப் பகுதிகளில்) 
3. ஊராட்சி ஒன்றிய ஆணையர் (ஊரகப் பகுதிகளில்) 
4. மாவட்ட சமூகநல அலுவலர்கள் 
5. சமூகநல விரிவாக்க அலுவலர்கள்
6. மகளிர் ஊரக நல அலுவலர்கள் 
7  விண்ணப்பங்களை பரிசீலிக்க உத்தேசிக்கப்பட்ட கால அளவு  விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள்
8  தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள்  திருமண தேதியன்றோ அல்லது திருமணத்திற்குப் பிறகோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

9  சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்:-
1. பள்ளி மாற்றுச் சான்று நகல் 
2. மதிப்பெண் பட்டியல் நகல்- பத்தாம் வகுப்பு-
 திட்டம்-1  3. பட்டப்படிப்பு /பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று நகல் -
திட்டம்-2 4. வருமானச் சான்று  5. திருமண அழைப்பிதழ்  
10.  குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்  மாவட்டங்களில்   மாவட்ட ஆட்சியர் / மாவட்ட சமூகநல அலுவலர்  மாநில அளவில் -  சமூகநல இயக்குநர்,
சென்னை 600 005. 
தொலைபேசி எண். 044-28545728.

3 comments:

Thiyaga Rajan said...

ஏழை பெண் திருமண உதவித்தொகை விண்ணப்பித்து ஒரு ஆண்டுகள் ஆகியும் உதவி தொகை கிடைக்க வில்லை எனில் என்ன செய்ய வேண்டும். அதற்க்கான தகவல்களை தரவும் .

KS said...

CALL ME 9894011050

RAVI CHANDRAN.K said...

ஏழை பெண் திருமண உதவித்தொகை விண்ணப்பித்து ஒரு ஆண்டுகள் ஆகியும் உதவி தொகை கிடைக்க வில்லை எனில் என்ன செய்ய வேண்டும். அதற்க்கான தகவல்களை தரவும்

Post a Comment

 
l
j