தமிழ் நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் செவிலியர்களின் நிரந்தர பணி பெற்றிட 2009 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1. இதுநாள் வரை நம்பியிருந்த அந்த சங்கத்திற்கு ஒப்பந்த செவிலியர்கள் கடிதம் அனுப்பினர். 2. நிரந்தர செவிலியர்களின் ஊதிய முரண்பாடு ஏற்பட்ட போது, ஒப்பந்த அடிப்படை செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய அரசை வற்புறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 3. ஓப்பந்த செவிலியர்கள் அனைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டது இது போன்ற ஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராய் வீணாய் போணது. அது ஏன் என்று தெரியாமல் அனைவரும் குழம்பி போய் இருந்தனர். 1. ஆனால் அந்த சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு "ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் அந்த சங்கத்தின் பை லா (Bye Law) படி உறுப்பினரே கிடையாது, எனவே அவர்களுக்காக நாங்கள் பேச முடியாது என பதிலுரைத்தனர்." 2. 2010 ஆம் வருடத்திய பேரணி முடிவில் "இதுதான் தரமுடியும், இஷ்டம் இருந்தால் வேலை