தமிழகத்தின் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பல்வேறு திட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர். இதனால் சுகாதார நிலைய கவனிப்பு பிரசவம் அதிகரித்து ( institutional delivery) உள்ளன. இரண்டு வருட ஒப்பந்த அடிப்படை பணிக்கு பிறகு நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவர் என்ற ஒப்பந்தத்தில் பணி அமர்த்தப்பட்ட செவிலியர்கள், 5 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஒப்பந்த அடிப்படையிலேயே உள்ளனர். இப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 செவிலியர்களை மட்டுமே பணியில் இருந்தால் போதும் என்றும் மற்ற செவிலியர்களை பணியிட மாறுதல் செய்து திட்ட இயக்குநர் ஆணையிட்டுள்ளார். "எனக்கு இட மாறுதல் இல்லை, நான் ஏன் கவலை பட வேண்டும்" என்ற எண்ணத்தில் மற்ற செவிலியர்களும். இது ஏதோ மற்ற துறையில் நடக்கும் ஒன்று என்பது போல செவிலியர் அமைப்பும் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதைவிட மேலாக ஊதிய உயர்வு, 12 மணி நேர பணிக்கு ரூ. 1000 என கூறி இப்போது அது பிரசவம் மற்றும் நோட்டு புத்தகங்களை பராமரித்தால் ( performance-based incentive) ம�ட்டுமே ரூ. 1000 உண்டு என திட்ட இயக்குநர் கூறியதாக கூறுகின்றனர். இது செவிலிய ப