Skip to main content

ஒப்பந்த அடிப்படை செவிலியரா?, அடிமை இனமா?.

தமிழகத்தின் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பல்வேறு திட்டங்களில் பணியமர்த்தப்பட்டனர். இதனால் சுகாதார நிலைய கவனிப்பு பிரசவம் அதிகரித்து ( institutional delivery) உள்ளன.
இரண்டு வருட ஒப்பந்த அடிப்படை பணிக்கு பிறகு நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவர் என்ற ஒப்பந்தத்தில் பணி அமர்த்தப்பட்ட செவிலியர்கள், 5 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஒப்பந்த அடிப்படையிலேயே உள்ளனர்.
இப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 செவிலியர்களை மட்டுமே பணியில் இருந்தால் போதும் என்றும் மற்ற செவிலியர்களை பணியிட மாறுதல் செய்து திட்ட இயக்குநர் ஆணையிட்டுள்ளார். "எனக்கு இட மாறுதல் இல்லை, நான் ஏன் கவலை பட வேண்டும்" என்ற எண்ணத்தில் மற்ற செவிலியர்களும். இது ஏதோ மற்ற துறையில் நடக்கும் ஒன்று என்பது போல செவிலியர் அமைப்பும் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இதைவிட மேலாக ஊதிய உயர்வு, 12 மணி நேர பணிக்கு ரூ. 1000 என கூறி இப்போது அது பிரசவம் மற்றும் நோட்டு புத்தகங்களை பராமரித்தால் ( performance-based incentive) ம�ட்டுமே ரூ. 1000 உண்டு என திட்ட இயக்குநர் கூறியதாக கூறுகின்றனர். இது செவிலிய பணியில் எவ்வளவு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுகூட தெரியாமல் தனியார் நிறுவன முதலாளிகள் போல நடந்து கொள்ளும் விதம் வருத்தம் அளிக்கிரது.
தீர்வுதான் என்ன.
ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் அவர்களின் உரிமை என்ன என்று கூட தெரியாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையமே கதி என வாழும் மோசமான நிலை நிலவி வருகிறது.
1) அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவது.
2) performance based incentive முறையை முற்றிலும் நீக்க வேண்டும்
3) அனைத்து ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

Comments

Popular posts from this blog

ஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை

முதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.
Honourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.
மகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.
யார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்

1  திட்டத்தின் பெயர்:-
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.

2  திட்டத்தின் நோக்கங்கள்:-
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.

3  வழங்கப்படும் உதவி:-
திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

4  பயன் பெறுபவர்கள்:-
ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம்.  பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.

5  தகுதிகள் / நிபந்தனைகள்:-
அ) கல்வித் தகுதி

திட்டம் 1 
1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .

2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.

3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.

திட்டம் 2 
1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…

Staff Nurse Recruitment in Tamil Nadu Government

இந்திய வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக, எத்தனை வருடம் என்று சொல்ல முடியாத வருடம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, செவிலியர்களை  தமிழக மருத்துவ பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.for more details visit www.mrb.tn.gov.in