அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் பயிற்சி பணிக்காக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது அதற்கான அட்டவணை இங்கு தரப்பட்டுள்ளது செவிலியர்கள் தவறாமல் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட துணை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
1 திட்டத்தின் பெயர்:- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். 2 திட்டத்தின் நோக்கங்கள் :- ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும். 3 வழங்கப்படும் உதவி:- திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். 4 பயன் பெறுபவர்கள்:- ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம். 5 தகுதிகள் / நிபந்தனைகள்:- அ) கல்வித் தகுதி திட்டம் 1 1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) . 2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும். 3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும். திட்டம் 2 1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அ
Comments
Post a Comment