Skip to main content

Posts

Showing posts from February, 2015

Income Tax Related Tips

TAX TIPS CALCULATE YOUR ”IT” EARLIER:- அக்டோபர் மாதத்தில் தமிழக அரசு, அகவிலைப்படியை   (D.A.) அறிவித்துவிடும் எனவே அப்போதே INCOME TAX ஐ கணக்கீடு செய்து, வரும் வரியை நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களில் வங்கியில் செலுத்தினால், வருமான வரி கட்ட வேண்டுமே என்ற சுமை குறையும். தற்போது வருமான வரியை ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளதால் வங்கிக்கு சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. PUBLIC PROVIDENT FUND:- PPF ஆனது சிறந்த சேமிப்பு மற்றும் வரிசலுகை வழங்கும் திட்டம் ஆகும், இதற்கு ஆன்லைனிலே விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. PPF ற்கு முதலில் தொடங்கும் பிரிமியம் மட்டுமே கடைசி வரை கட்ட முடியும் எனவே அதிக தொகையாக செலுத்தி தொடங்கவும், ஒரு FINANCIAL YEAR ல் 12 தவணையாக எவ்வளவு தொகை வேண்டுமானலும் செலுத்தலாம், இதில் கடன் பெறும் வசதியும் உள்ளது. YOUR ”IT” NOT GOING TO YOUR PAN:- ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருமான வரி PAN NUMBER ல் சேர்வதில்லை என கூறப்படுகிறது. எனவே உங்கள் வருமான வரியை வங்கியில் செலுத்தினால் நேரடியாக PAN NUMBER ல் பதிவு ஆகும், RETURN தாக்கல் ச

JOB DESCRIPTION OF PHC's VARIOUS POST

தமிழ்நாடு மாநில சுகாதார நலச்சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நல பணிகளை மேம்படுத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பு மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோர்களின் பணிகளை வரையறுத்து அதன் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளது. இணையதள முகவரி Click Here www.nrhmtn.gov.in/jobdescription.html Our TNNURSE.ORG File Server (1)  Medical Officer Job Description .pdf (2)  Staff Nurse Job Description .pdf (3)  Pharmacist Job Description .pdf (4)  Community Health Nurse Job Description .pdf (5)  Sector Health Nurse Job Description .pdf (6)  Village Health Nurse Job Description.pdf (7)  Health Inspector Job Description.pdf

CPS Government Contribution Can be deducted from savings

CPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பினை வருமான வரிகணக்கில் சேமிப்பில் கழித்துக் கொள்ளலாம் - வருமான வரித்துறையின் RTI பதில் PLEASE CLICK HERE TO DOWNLOAD THE ABOVE FILE AS PDF

NHIS Deduction Under 80 D Income Tax Rules ( not under 80 C)

தமிழக அரசு ஊழியர்கள், தங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் புதிய சுகாதார காப்பீட்டு திட்ட தொகையை (NHIS Deduction Rs. 150/- per month) வருமான வரி கணக்கின் போது 80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம். வழக்கமாக 80C யில் பழைய சுகாதார திட்ட தொகை வரி சலுகை பெறப்பட்டு வந்தது.  தற்போதைய சுகாதார காப்பீட்டு திட்டம், பங்களிப்பு காப்பீட்டு திட்டமாக அறிவிக்கப்பட்டதால் ரூ. 1800/- ஐ  80 D விதியின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம். Please click here to get the RTI Details for the above

National Florence Nightingale Award 2015 Application Invited

செவிலிய துறையில் சீரிய பணிபுரிந்த I) செவிலியர்கள், II) துணை செவிலிய மகப்பேறு உதவியாளர்கள், III) பெண் சுகாதார பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கு, தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து விண்ணப்பங்களும், உயர்மிகு சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் கீழ் இயங்கும் மாநில தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும், அவர்கள் மத்திய அரசின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள், விண்ணப்ப படிவம், அரசு கடிதம், வழிமுறைகளை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Civil Nursing List

தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களின் விவரப்பட்டியல் (CIVIL NURSING LIST) மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநகரத்தில் இருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் கோரப்பட்டுள்ளது, மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் தங்கள் விவரப்பட்டியலை அலுவலகத்தில் இருந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநகரத்துக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம். இது தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களின் ஒட்டுமொத்த சீனியாரிட்டி விவரம் தயார் செய்வதற்கு ஆகும் உயர்திரு. இயக்குநரின் கடிதத்தை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் TNNURSE.ORG FILES