ராஜஸ்தான் மாநிலம் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்ஸ் பணியிடங்களுக்கு 615 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக 'எய்ம்ஸ் (AI-I-MS) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள், கல்லூரிகள், ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்ஸ் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 615 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 'அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட்' பணிக்கு 15 பேரும், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-1) பணிக்கு 50 பேரும், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-2) பணிக்கு 550 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் கீழே தரப்படுகிறது... வயது வரம்பு: 'அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டென்ட்' மற்றும் 'ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-1)' பணிகளுக்கு 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 'ஸ்டாப் நர்ஸ் கிரேடு-2