Staff Nurse Transfer Counseling on 3-2-16

பொதுவாக அவரவர் பிரச்சனையை அவர்கள் தீர்க்க வேண்டும்,

ஆனால் சுகாதார துறையில் அனைத்து தர்ப்பினரின் பிரச்சனையை ஒப்பந்த செவிலியர்கள் தீர்க்க வேண்டி உள்ளது.

டாக்டர் ஊசி போடலயா ஒப்பந்த நர்ச போஸ்டிங் போடு,

பார்மசிஸ்ட் மாத்திரை தரலையா ஒப்பந்த நர்ச போஸ்டிங் போடு,

லேப் டெக்னீசீயன் டெஸ்ட் பண்ணலயா ஒப்பந்த நர்ச போஸ்டிங் போடு.

ஆனால் இவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய செவிலியர்களுக்கு பிரச்சனையா அதையும் ஒப்பந்த செவிலியர்கள் தீர்க்க வேண்டி உள்ளது.

செவிலிய கண்காணிப்பாளர் பதவி உயர்வா ஒப்பந்த செவிலியர் போராட்டம் நடத்தினால் தான் நடக்கும்.

செவிலிய கண்காணிப்பாளர் பணி இட மாறுதலா ஒப்பந்த செவிலியர் போராட்டம் நடத்தினால் தான் நடக்கும்.

இப்போது நிரந்தர செவிலியர் பணி இட மாறுதலும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தால் நடக்கிறது என்பதை மறுக்க இயலாது.

இதையும் நான் தான் செய்தேன் என பிரச்சாரம் செய்ய சில பிரச்சார பீரங்கிகள், புகைப்பட புழுக்கள் அலைகிறார்கள்.

நிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி இட மாறுதல்  
03 - 02- 2016

இடம்: DMS அலுவலகம்

வரும் திங்கள் (03/02/2016) நிரந்தர செவிலியர்களுக்கு பொது பணி இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்பொழுது பணி புரியும் இடத்தில குறைந்தது ஒரு வருடம் பணி புரிந்து இருக்க வேண்டும்.

மேலும் கண்டிப்பான முறையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் செவிலிய சகோதரிகள் தாங்கள் பணி புரியும் நிலையத்தில் இருந்து ஒரு வருடம் பணி புரிந்து இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக SERVICE CERTIFICATE கண்டிப்பான முறையில் கொண்டு வர வேண்டும்.

SERVICE CERTIFICATE கொண்டு வராத சகோதரிகள் பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க பட மாட்டார்கள்.

1 Comments

  1. when will the next transfer counselling for regular nurse?plz inform,

    ReplyDelete
Previous Post Next Post