Skip to main content

Facebook for Nurses

பெரும்பாலும் நாம் சமூக வலைதளங்களான FACEBOOK, TWITTER போன்றவற்றை  உபயோகப்படுத்துகிறோம்,
சமூக வலைதள தொழில்நுட்பங்களில் நிறை குறைகள் இருந்தாலும் அவற்றின் அதிகபட்ச உபயோகத்தினை நாம் பெற சமூக வலைதளத்தினை முறையாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

நமது செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான உண்ணாவிரதம், போராட்டம் போன்றவற்றின் புகைப்படம் செய்திகள் FACEBOOK ல் வந்த போதும் அவற்றிற்கான சமூக வலைதள அந்தஸ்து கிடைப்பதில்லை.

நாம் ஹேஸ்டேக் ( Hashtag) குறியீடுகளை பய்ன்படுத்துவதில்லை, இவற்றினை பயன்படுத்தும் போது இதே போன்ற குறியீடு உடைய மற்ற நபர்களின் பதிவுகளும், கமண்ட்டுகளும் FACEBOOK இணையதளத்தால் கணக்கில் எடுக்கப்பட்டு, அதிக பகிர்வுகள் வரிசையில் (Trends)  காட்டப்படும்.

செவிலியர்கள் ஓர் உலக இனம், ஒரு மூலையில் பாதிக்கப்படும் செவிலியர்களைப்பற்றி மற்றொரு மூலையில் உள்ள செவிலியர்கள் அறிந்து கொள்ள வைக்க வேண்டும்.

எனவே வருகின்ற உண்ணாவிரதம் தொடர்பாக நீங்கள் பகிரும் ஒவ்வொரு புகைப்படம் மற்றும் பதிவுகளில் #REGULARISE_TN_NURSES என Hashtag சேர்த்து பதியுங்கள். Post ஐ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பகிருங்கள்.

உதாரணமாக:-
தமிழகத்தில் சுமார் 10000 த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சமூக பாதுகாப்பு இன்றி, தற்காலிக முறையில்,கொத்தடிமைகளாக பணிபுரிகின்றனர்.

#தமிழக_அரசே_ஒப்பந்த_செவிலியர்களை_பணி_நிரந்தரம்_செய்க.

In Tamil Nadu State there are more than 10000 Nurses in Bonded Labour without social security.

#Regularise_TN_Nurses.

என.

ஒரே வார்த்தையிலான அதிக பகிர்வு உலகினை நம் பக்கம் திருப்பும்.

Comments

Popular posts from this blog

ஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை

முதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.
Honourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.
மகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.
யார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …

Staff Nurse to Nursing Superintendent Grade 2, Panel List for the year 2019 2020

Staff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

List of Eligible Staff Nurses for the Promotion of Nursing Superintendent, Service Particulars Called by The DMS.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்

1  திட்டத்தின் பெயர்:-
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.

2  திட்டத்தின் நோக்கங்கள்:-
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.

3  வழங்கப்படும் உதவி:-
திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

4  பயன் பெறுபவர்கள்:-
ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம்.  பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.

5  தகுதிகள் / நிபந்தனைகள்:-
அ) கல்வித் தகுதி

திட்டம் 1 
1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .

2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.

3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.

திட்டம் 2 
1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…