Skip to main content

Central Nurses Struggle Live Long

மத்தியில் செவிலியர்களின் போராட்டம் பாராட்டக்குரியது.
.........
தெளிவான குறிக்கோள், அணிதிறண்ட செவிலிய ஒற்றுமை,முறையான தலைமையின் ஒருங்கிணைப்பு
பாராட்டக்குரியது.
...........
இதைப் பார்க்கையில் நம்மில் பல ஆச்சரியக்குறி!! !!! !!
 கேள்விக்குறி????????
..........

1.கண்ணுக்கு தெரியா எதிரியுடன் நித்தம் போராடும் நமக்கு
---செவிலியப்படி???
----அரசுப்பணியின் போது      இறக்கநேரிடின் குடும்ப உறுப்பினர் பணிக்கு உறுதியளித்தல்

2.தீவிர சிகிச்சை, அறுவைசிகிச்சை பகுதி செவிலியர்களுக்கு சிறப்புப் படி

3.தர உயர்வு ஒவ்வொரு பதவி உயர்விலும்...

4.மாதாந்திர சீருடைப்படி

5.பழைய பென்சன் கோருதல் இது சாத்தியமில்லா பட்சத்தில் புதிய பென்சன் திட்டத்தில் கல்வி மற்றும் திருமண லோன் வசதி.

6.ஒப்பந்த பணி அறவே அகற்றம்.
  இதுவரை ஒப்பந்த பணியில்   பணி ஆற்றிய வருடங்களை பணப்பயன் இல்லாவிட்டாலும் பணியாக கணக்கிடும் பட்சத்தில் (10 வருடம்)தேர்வு நிலை Selection grade க்கு உதவும்

7.மத்திய அரசு போன்று பதவி உயர்வு கேட்டுப் பெறும்பட்சத்தில்
10 வருடம் பணியின்றி பின்பு பணியில் வந்தவர்களுக்கு " Floor Incharge Sister" என்ற பதவி உயர்வுடன் தர ஊதிய உயர்வு.

8.நமது செவிலியக்கண்கா. பதவி உயர்வானது 30 வருடம் கழித்து தான் வருகிறது அதுவும் Grade Pay உயர்வின்றி.
.(சாபக்கேடானது) இதுவும் மாற்றப்பட வேண்டும்.

9.மத்தியில் நம் மக்கள் பெறும் அலவன்ஸ்  ல் பாதி கூட நாம் பெறவில்லை.அதற்க்கான முயற்சி

10.தனி செவிலிய இயக்குனரகம் மற்றும் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு.

11.செவிலிய மாணவர்களின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு

12.சங்கத்திற்கு தனி கட்டிடம்

 இது என்னுள் தோன்றியது
                          By
               L.Rajaram
        Govt.RMH Thanjavur.

Comments

Popular posts from this blog

ஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை

முதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.
Honourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.
மகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.
யார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …

Staff Nurse to Nursing Superintendent Grade 2, Panel List for the year 2019 2020

Staff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

List of Eligible Staff Nurses for the Promotion of Nursing Superintendent, Service Particulars Called by The DMS.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்

1  திட்டத்தின் பெயர்:-
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.

2  திட்டத்தின் நோக்கங்கள்:-
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.

3  வழங்கப்படும் உதவி:-
திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

4  பயன் பெறுபவர்கள்:-
ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம்.  பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.

5  தகுதிகள் / நிபந்தனைகள்:-
அ) கல்வித் தகுதி

திட்டம் 1 
1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .

2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.

3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.

திட்டம் 2 
1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…