"செவிலியர் குரல்"

அரசு  மருத்துவமனைகளில்  அரசுப்பணி சுகாதார  பணியாளர்கள்  குறைவு .


தனியார்  நிறுவனம்  ஒன்று  புற ஆதார  அடிப்படையில்  பணி செய்கின்றது .


அந்த  நிறுவனத்தின்  கீழ்  ஒவ்வொரு  மருத்துவமனையிலும்  பணியாளர்கள் ,கண்காணிப்பாளர்கள் , மேலாளர்  ஆகியோர்  நியமனம்    செய்யப்பட்டுள்ளனர்அ, வர்கள் 3  ஷிப்டாக  பணியில்  உள்ளனர், புற ஆதார ஊழியர்களின் வருகை  பதிவேட்டை  பராமரிப்பதும்  அவர்களே,    கழிவறை ,வார்டை  சுத்தம்  செய்வது  மட்டுமே  எங்கள் வேலை  மற்ற வேலைகள்  செய்ய மாட்டோம் . என்கிறார்கள் .


ஒரு வார்டு  என்று  எடுத்து கொண்டால்  குறைந்தது  20  நோயாளிகள்   இருப்பர் . சில  விதிவிலக்குகள்  உண்டு  50  க்கும் மேல் இருப்பர் .


ஒரு  நோயாளி  அனுமதிக்க  பட்ட உடன்  அவருக்கு  ரத்தப்பரிசோதனை , X - Ray, ஸ்கேன்  சிறப்பு மருத்துவர்களின்  கருத்துரு, மயக்க  மருத்துவரின் ஒப்புதல், என  பல்வேறு இடங்களுக்கு  அழைத்து  செல்ல வேண்டும்.


மருத்துவமனை  பணியாளரோ  6  வார்டிற்கும்  சேர்த்து ஒருவர்  இருப்பார் .
அவர்  எப்படி 100  க்கும் மேற்பட்ட  நோயாளிகளை  அழைத்து செல்ல  முடியும் .


பரிசோதனைகள்  முடிக்கவில்லை  என்றால்  செவிலியர்கள் மருத்துவரின் கோபத்திற்கு  உள்ளாக  நேரிடும் .


நோயாளியின் உறவினரை  வைத்து  வீல் சேரை  தள்ள வைத்தால்
அதுவும்  பிரச்னை .


மருத்துவ படிப்பிற்கு  மருத்துவ குழுமம்  அனுமதி வழங்க  மருத்துவமனையில்  மருத்துவர்கள் , செவிலியர்கள்  எண்ணிக்கை முக்கியம் . மற்ற  பணியாளர்கள் கணக்கில் கொள்வதில்லை .


அவர்களின்  பெயரே " அடிப்படை  பணியாளர்"    ஆனால்  மருத்துவமனை  இயங்குவதோ  அடிப்படையின்றியே.


முன்பெல்லாம்   அறுவை அரங்கில்  அறுவை அரங்கு உதவியாளர்  ,
மருத்துவமனை பணியாளர்  , என 5 க்கும் மேற்பட்டோர்  இருப்பர்  .
ஆனால் இப்போது  5 அரங்கிற்கும் சேர்த்து  ஒருவர்  உள்ளார் .
அறுவை அரங்கில்  அவர்களின் பணியையும்  சேர்த்து செவிலியர் பார்க்க  வேண்டி உள்ளது .


அறுவை  சிகிச்சைக்கு  தயார்  படுத்த  எத்தனை வேலை ?
நோயாளியின்  முடியை  நீக்குவதில் ஆரம்பித்து  நகங்களை வெட்டி ,அறுவை சிகிச்சைக்கான இடத்தை  மருந்திட்டு  துடைப்பது ,
gauze ,bandage  தயாரித்தல்   போன்றவைகளுக்கெல்லாம்  பணி  செய்ய
ஆட்கள் குறைவு.


ஒரு அவசர  தேவைக்கு  டீ வாங்கி  கொடுக்க  கூட ஆளில்லை .
குறிப்பாக  செவிலியர்களுக்கு  வாங்கி  தரக்கூடாது  என  ஒப்பந்த
பணியாளர்களுக்கு  உத்தரவாம்.


நமக்கு  பெயர்  செவிலித்தாய்   ஒரு வீட்டில் தாய்  இல்லாமல்  எதுவும்  இல்லை  . அன்பின்  காரணமாக  தாயிக்கு வீட்டில் மரியாதை  இல்லை .


மொத்தத்தில்.
அதிகாரம்   பரவலாக்க பட வேண்டும் ....
மருத்துவமனை  பணியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட  வேண்டும்.


 செவிலியர்களுக்கான  பணி  மற்றும்  அதிகாரம்  வரையறுக்க பட வேண்டும்.


இது  யாரையும்  குறை  சொல்வதற்கான  பதிவல்ல.
நேரில்  சந்திக்கும்  இடர்களை  வெளிச்சத்திற்கு  கொண்டு  வருவதற்கான  பதிவு.

பா .மணிகண்டன்
நெல்லை.

Post a Comment

Previous Post Next Post