Skip to main content

செவிலியர் போராட்டம் குறித்து ஒரு சிறிய தீர்வு,


தற்போது உள்ள ஒப்பந்த செவிலியர் காலமுரை ஊதியம் பெற கீழ்கண்ட வழிமுறைகளை நடைமுறை படுத்த உழைத்தால் ஓரளவு விரைவாக பணி நிரந்தரம் அடைய வாய்ப்புள்ளது.

1.அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 பணியிடம் புதியதாக தோற்றுவித்தல்.

2.செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்கும் பொழுது, செவிலியர் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் பெண் மருத்துவ பணியாளர், சமையளர், துணி துவைப்பவர் etc போன்று செவிலியர் கண்கானிப்பாளரின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் விகிதாச்சார அடிப்படையில் தோற்றுவித்தால், அதிக்கப்படியான செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

3.அனைத்து Taluk & Non Taluk மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்க அழுத்தம் தர வேண்டும்.

4.அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் செவிலியர் பயிற்சி கல்லூரி ஆரம்பிக்க அழுத்தம் தர வேண்டும் இதனால் அதிக்கப்படியான செவிலியர்கள் post bsc படிக்கும் வாய்ப்பு ஏற்படும் மேலும் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

5. 2:1 ratio அரசானை படி இரண்டு ஒப்பந்த அடிப்படை செவிலியர் பணியிடம் தோற்றுவித்தால் ஒரு நிரந்தர செவிலியர் பணியிடம் தோற்றுவிக்கபட வேண்டும். இதுவரை அவ்வாறு சரியான முறையில் தோற்றுவிக்கபட்டதா என்பதை ஆராய்ந்து அதில் ஏதேனும் விடுபட்டு இருந்தால் அதை நிரப்ப முயற்சிக்க வேண்டும்.

6.DME யின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள், பழைய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் கூடுதல் செவிலியர் பணியிடங்கள் தோற்றுவிக்க பல வருடங்களாக  கோரப்பட்டு வருகிறது, தற்போதைய சூழ்நிலையில் இது நடைபெற வாய்புகள் மிக குறைவு என்பதால் ஏனைய மருத்துவமனைகளில் தமிழக அரசின் நேரடி ஒப்பந்த முறையில் செவிலியர் நியமிக்க அழுத்தம் தர வேண்டும்.
ஒப்பந்த முறையே வேண்டாம் என்கிற போது மீண்டும் ஒப்பந்த முறையை நாமே ஊக்கபடுத்துவதா என கேட்கலாம், தமிழக அரசின் நேரடி ஒப்பந்த முறையில் பணியமர்தப்பட்டால் நமக்கு 2:1 விகிதாசார அரசானை படி குறிப்பிட்ட அளவு நிரந்தர பணியிடம் கிடைக்கும், மேலும் கடந்த 2006 மற்றும் 2015 காலகட்டங்களில் செய்தது போல, தமிழக அரசானது தனது கொள்கை முடிவால் ஒப்பந்த முறையை ஒழித்து நிரந்தர பணியிடங்களாக அவற்றை மாற்ற வாய்ப்புள்ளது. இதனால் பணிச்சுமையும் குறையும். தமிழக அரசின் நேரடி ஒப்பந்த முறை என்பதால் இதை பின் நாட்களில் நிரந்தர பணியிடமாக மாற்ற அதிக வாய்ப்புள்ளது.

6.எனக்கு தெரிந்த சுலபமான வழிமுறைகள் இவை,  வேறு வழிமுறைகள் தங்களுக்கு தெரிந்தால் தெரிய படுத்தவும்.
           
முதலில் நமது வாய்ப்புகளை அரசாங்கத்திற்கு தெரிய படுத்தி, முறையாக சங்கத்தின் வாயிலாக அதிகாரிகளிடம் நடந்து தேய்ந்து பின்னர் போராடினால் வெற்றி கிடைக்கும். முதலில் பல பிரிவுகளாக இருப்பவர்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் வழிகாட்டல் படி முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

உங்கள் சகோதரன்,
கு.விக்னேஷ் குமார்
காஞ்சிபுரம்.

Comments

  1. Please all 11000 contract nurses do bulk resignation at one go. The govt definitely come down.

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms