Skip to main content

குறைதீா்ப்பு முகாம்

*¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤*
_*குறைதீா்ப்பு முகாம்:*_
*¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤*
_*தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்.*_

_மருத்துவக்கல்வி இயக்கக *(DME)* மேற்பாா்வையில்,தமிழ்நாடு அரசு மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் பணிபுாியும் செவிலியா்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் என்னவெனில்,_

_தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் மூலம் அரசிடமும் மூன்று இயக்குனா்களிடம் *(DME,DMS,DPH)* வைத்த பலமுறை வேண்டுகோளுக்கிணங்க,தற்போது DME Side பணிபுாியும் செவிலியா்கள் அவா்களின் மருத்துவமனைகளில் அன்றாடம் சந்திக்கும் சிரமங்கள்,செவிலியா்கள் பற்றாக்குறை,துறை ரீதியான பிரச்சனைகள்,சம்பளம்,லீவு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் செவிலியா்களுக்கு நோிடையாகவோ,மறைமுகமாகவோ ஏற்படும் அனைத்து குறைகளையும் களையும் நோக்கில் *வருகிற 16/07/2018* சென்னை DME அலுவலகத்தில் ஓா் குறைதீா்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது._

_DME Side பணிசெய்யும் செவிலியா்கள் தங்களுக்கு பணிநிமித்தம் ஏற்பட்டுள்ள எந்தவகையான பிரச்சனைகளானாலும் கீழ்கண்ட அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வரும் *12/07/2018( வியாழக்கிழமை)* மாலைக்குள் எழுத்து மூலம் தங்களின் குறைகளை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்._

*。✿‿✿。。✿‿✿。。✿‿✿。。✿‿✿。*
_*குறைகளை தொிவிக்கும் அலுவலக வாட்ஸ்ஆப் எண்: 9884344666*_
*。✿‿✿。。✿‿✿。。✿‿✿。。✿‿✿。*

_இந்த செவிலிய குறைதீா்ப்பு முகாம் தற்போது DME side மட்டும் முதலில் நடைபெறுகிறது.இதற்கு அடுத்ததாக DMS மற்றும் DPH side குறைதீா்ப்பு முகாம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்._

_மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் பணிபுாியும் செவிலியா்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை அலுவலக ரீதியாக தீா்வுகான இந்த அாியவாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்._

               *# நன்றி #*

_*இப்படிக்கு,*_

_*K.வளா்மதி,*_
_*மாநில பொதுச்செயலாளா்,*_

_*K.சக்திவேல்,*_
*_மாநில தலைவா்,_*

_*S.காளியம்மாள்,*_
_*மாநில பொருளாளா்,*_

_*மற்றும்*_

_*மாநில அனைத்து நிா்வாகிகள்*_

_*தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.*_

Comments

  1. சங்கத்தலைவருக்கு எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றவில்லை . நாங்கள் 7 வருடங்கள் கழித்துதான் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டுள்ளோம். எங்களுக்கு 2 அல்லது 3 ஆண்டுகளை சர்விஸில் சேர்க்க கோரிக்கை வைத்தோம். முன்னேற்றமில்லை

    ReplyDelete
  2. இதில் குறை தீர்ப்பு முகாம் எதற்கு

    ReplyDelete
  3. வெறும் 4500 சம்பளத்தில் cb ஆக இருந்தோம் . ரெகுலர் ஆகும் வரை எங்களுக்கு வருடத்திற்கு 500 ருபாய் மட்டுமே சம்பள உயர்வு. எங்களுக்கெல்லம் பணி மாறுதல் என்பதே கிடையாது.

    ReplyDelete
  4. எங்களுக்கு மனவேதனையை தருகிறது. குறை தீர்ப்பு முகாம் நடத்துவதால் என பலன். வெறும் கண் துடைப்பு தானா. சங்கத்திலிருந்து பணம் மட்டும் வாங்கிட்டாங்க.ஆனால் இப்ப வந்த mrb க்கு 2வருடத்தில் பணி நிரந்தரம் .

    ReplyDelete
  5. எங்களின் மனக்குமுறலை எங்கு போய் சொல்வது . சங்கம் இதை கவனிக்குமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  6. சங்கத்தலைவரின் மொபைல் எண்ணை இங்கே பதிவிடவும்

    ReplyDelete
  7. வளர்மதி மேடம் அவர்களின் எண்ணை இங்கே பதிவிடவும்

    ReplyDelete
  8. When will our uniform change?

    ReplyDelete
  9. With in 1yr regular staff maternity leave salary irukka

    ReplyDelete
  10. With in 1yr regular staff maternity leave salary irukka

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms