ஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை

முதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.

Honourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.

மகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.

யார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது (திரு மணிகண்டன் செவிலிய கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி).

இதனை கருத்தில் கொண்ட இயக்குநர்கள் DPH மற்றும் DMS அவர்கள் ஒரு வருட காலம் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் அனைத்து நிரந்தர செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என துறை ரீதியான கடிதம் எழுதினர்.

DPH அவர்கள் தனது கடிதத்தில் மகப்பேறு மாதா மாதம் வழஙகப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு நிதி விதியை மேற்கோள் காட்டி இருந்தார்

DMS அவர்கள் செவிலியர்கள் பணியில் இணைந்த உடன் Regularization க்கான கருத்துருஅனுப்ப வேண்டும் எனவும். ஒரு வருடம் பணி புரியும் வரை காத்திருக்க வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.


தற்போது மேற்கண்ட இயக்குநர்களின் கடிதங்களை அடிப்படையாக கொண்டு, ஏற்கனவே மகப்பேறு விடுப்பிற்கு ஊதியம் மறுக்கப்பட்ட செவிலியர்களின் ஆணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி, தற்போது அந்த விடுப்பிற்கான திருத்தப்பட்ட ஆணை மற்றும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த திருத்திய ஆணை கீழே

ஏற்கனவே மகப்பேறு விடுப்பிற்கு ஊதியம் மறுக்கப்பட்ட செவிலியர்களின் ஆணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி, தற்போது அந்த விடுப்பிற்கான திருத்தப்பட்ட ஆணை மற்றும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மகப்பேறு விடுப்பிற்கு ஊதியம் மறுக்கப்பட்ட செவிலியர்களின் ஆணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி, தற்போது அந்த விடுப்பிற்கான திருத்தப்பட்ட ஆணை மற்றும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.



செவிலியர்களின் நலனுக்காக இதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்த S.R. மோகன் செவிலியர் அவர்களுக்கும் நன்றி.

எனவே இதுவரை பணியில் இணைந்து, ஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்து ஊதியம் பெறாத செவிலியர்கள், மேற்கண்ட இயக்குநரின் கடிதத்தில் உள்ள வழிமுறைகளை கடைப்பிடித்து ஊதியம் பெற்று கொள்ள ஆவண செய்யுமாது அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் மகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் மீண்டும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

7 Comments

  1. Good news master and really try to arrange for contract basis nurses also .that's peoples are so paaavam

    ReplyDelete
  2. Thank you so much for sharing the news! If you have not had Gmail account, it will be easier to start with email login

    ReplyDelete
  3. Sir i have one doubt,pls tell answer for this questions sir,NCD staff duty hours timing@G.O for duty hours sir

    ReplyDelete
  4. Sir i have one doubt,pls tell answer for this questions sir,NCD staff duty hours timing@G.O for duty hours sir

    ReplyDelete
  5. Sir i have one doubt,pls tell answer for this questions sir,NCD staff duty hours timing@G.O for duty hours sir

    ReplyDelete
  6. Can you please share the G.O
    about maternity leave included the service..

    ReplyDelete
  7. அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு

    மதுரை: அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணிபுரிகிறார். இவரது பெயர் 2019 ஆண்டுக்கான கூட்டுறவு தணிக்கை அதிகாரி பட்டியலில் சேர்க்கப்படவில்லை. பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை என்று கூறி பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி வேதநாயகி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.இவரைப்போல் பெண் அரசு ஊழியர்களும் பலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம் பிரிவு 12-ல் விடுமுறை பதவி உயர்வுக்கு தடையாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதை பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன் பிறகும் மனுதாரர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது என்றார். இதையடுத்து நீதிபதிகள், பணிக்காலத்தில் தான் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இவன்
    மதுரை வீரன்

    ReplyDelete
Previous Post Next Post