Skip to main content

Income Tax Calculation Excel Sheet for Nurses

முன்குறிப்பு:-
ஏதாவது சந்தேகம் என்றால் WHATSAPP இல் மட்டும் மெசேஜ் செய்யவும்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், வருகின்ற பிப்ரவரி 2020 மாதம், தங்களுடைய வருமான வரி கணக்கீடு செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்,

அதனை எளிமையாக்க, இங்கு வருமான வரி கணக்கீட்டு படிவம் ஒன்றை பதிவேற்றி உள்ளோம், தேவையான தகவல்களை உள்ளீடு செய்து உங்களுடைய வருமான வரி எவ்வளவு என கணக்கீடு செய்து கொள்ளவும்.

INCOME TAX CALCULATION EXCEL SHEET




HOW TO CALCULATE INCOME TAX 
IN MOBILE EXPLANATORY VIDEO




வருமான வரி படிவம் 2020 பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

🌻 நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/-ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.



🌻 மாற்றுத்திறன் ஊழியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

🌻 housing loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்

🌻 housing loan - அசல்  தொகையை Under chapter -VI (80-C)ல் கழித்துக் கொள்ளலாம்.

🌻 housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12cபடிவம் வைக்க வேண்டும்.

🌻 CPS திட்டத்தில் உள்ள ஊழியர்கள்  Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

🌻 School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

🌻 LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

🌻80DDB - Medical Treatment- ₹80,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

[Citizen- ₹40,000,
Senior Citizens - ₹60,000,
Super Senior Citizens - ₹80,000]

🌻 மாற்றுத் திறன் ஊழியர்கள்  ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/-  ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)

🌻மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

🌻 கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

🌻 நன்கொடை மற்றும்  முதலமைச்சர் நிவாரண நிதி ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை *80G ல் கழித்துக் கொள்ளலாம்.*

வரி விபரம்....

2,50,000 வரை - இல்லை

2,50,001 - 5,00,000 : 5%

5,00,001 - 10,00,000 : 20%

Above 10,00,000 : 30%

🌻வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

🌻 Taxable income ₹5,00,000-க்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ₹12,500/-  வரை 87A ல்  கழித்துக் கொள்ளலாம் !!!.

🌻 Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ. 10 க்கு முழுமையாக்க வேண்டும் !!!. வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம் !!!.

Comments

Post a Comment

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms