காலண்டரின் பக்கங்கள் தீர்ந்து போய் 2022 முடிய சில மணி நேரங்களே உள்ளன. நீங்கள் வருமானம் ஈட்டும் ஆண்டுகளில் ஒன்று குறைகிறது. ஓய்வு பெறும் நாள் இன்னும் சற்று அருகாமையில் வந்துள்ளது ஆண்டுக்கொருமுறை உடல்நலத்தை சரிபார்க்க மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் நேரத்தையும் பணத்தையும் செலவிடும் நம்மில் எத்தனை பேர் நம்முடைய பொருளாதார நலத்தை ஆண்டுக்கொருமுறை சோதிக்கிறோம்? பள்ளிகளில் தரும் ரிப்போர்ட் கார்டும், அலுவலங்களில் நடக்கும் அப்ரைசலும் அர்த்தம் பொதிந்தவை. நாம் எந்த விசயங்களில் வலுவாக இருக்கிறோம், எந்தெந்த விசயங்களில் வீக்காக இருக்கிறோம் – அந்த விசயங்களையும் வலுவானவை லிஸ்ட்டில் சேர்க்க அடுத்தாண்டுக்கான “ஆக்சன் ப்ளான்” என்ன என்பதையெல்லாம் தெளிவாக அவை விளக்கும். அதே போல் நம் பொருளாதார நிலைமையையும் Self Appraise செய்ய சரியான தருணம் புத்தாண்டு தினம். இதில் நாம் பார்க்க வேண்டியவை 1. *ஆயுள் காப்பீடு* நீங்கள் இதுவரை வைத்திருக்கும் ஆயுள் காப்பீடுகளை ஒரு முறை எடுத்துப் பாருங்கள். தொடரலாமா அல்லது விட்டொழிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் எண்டோமெண்ட் / மணி பேக் / யூலிப் பாலிசிகளை உடனடியாக தலை முழுகுங்கள்