Skip to main content

இந்தியாவில் செவிலியம் - வரலாறு

பழங்கால இந்திய ஆவணங்கள் செவிலிய பணியின் கொள்கை முறைகளை பற்றி விளக்குகின்றன அவை தெளிவாகவும், அறிவியல் நுட்பத்துடனும், அடிப்படை அறிவுடனும், இக்கால நவீன நூல்களுக்கு இணையாகவும் விளங்குகின்றது

முதலில் இளைஞர்களே செவிலிய பணியில் சேர்ந்தனர், பின்னர் மகப்பேறு துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்

இந்திய நாட்டில் நிலவி வந்த ஜாதி முறைகள், கல்வி அறிவின்மை, பெண்களின் பின் தங்கிய நிலைமை, சம உரிமை அற்ற அரசியல் ஆகிய காரணங்களால் செவிலியத்துறை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது,

1664 இல் கிழக்கிந்திய கம்பனி தனது வீரர்களுக்காக சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு வீட்டில் முதல் மருத்துவ மனையை ஆரம்பித்தது

இந்த மருத்துவமனையில் பணிபுரிய இலண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் இருந்து செவிலிய சகோதரிகள் வந்தனர்

1797 இல் சென்னையில் உள்ள ஏழைகளுக்காக மருத்துவர் ஜான் அண்டர்வுட் என்பவரின் பொருளுதவியுடன் ஒரு மகப்பேறு மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது அன்றைய அரசாங்கம் 1854 இல் மகப்பேறு செவிலியர்களுக்கென ஒரு பயிற்சி பள்ளியை சென்னையில் உருவாக்கியது

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் இந்தியாவில் மக்களின் நிலையை உணர்ந்து செவிலியப்பணி முன்னேற்றமடைய பல உதவிகள் செய்தார்
அவர் இந்திய இராணுவ வீரர்களின் நலத்துக்காக அரும்பாடுபட்டபோதும் இந்திய மக்களுக்கு தேவையான செவிலிய பணி சென்றடய ஆர்வம் காட்டினார்

1865 இல் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்கள் “இந்திய மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கான ஆலோசனைகள்” என்ற நூலை வெளியிட்டார்

1867 ஆம் ஆண்டு டெல்லியில் செயின்ட் ஸ்டீவன்ஸ் மருத்துவமனையில் இந்திய பெண்களுக்கான செவிலிய பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டது

1871 இல் சென்னை பொது மருத்துவமனையில் ஆறு மாதகால மகப்பேறு பட்டய படிப்பு பயிற்சி திட்டம் நான்கு மாணவிகளுடன் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது

அதே ஆண்டில் இங்கிலாந்தில் சிறந்த பயிற்சி பெற்ற நான்கு செவிலியர்களும் நான்கு பெண் செவிலிய கண்காணிப்பாளர்களும் சென்னை மருத்துவமனையில் பதவி ஏற்று சேவை புரிந்தனர்

1890 முதல் 1900 வரை சமய அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தால் இந்திய நாட்டின் பல பகுதிகளில் செவிலிய பயிற்சி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் தேசிய செவிலியர் அமைப்புகள் (சங்கங்கள்) தொடங்கப்பட்டன

1897 ஆம் ஆண்டு டாக்டர் பி.சி.ராய் செவிலியப்பணி முன்னேற்றமடையவும் ஆண், பெண் செவிலியர்களின் நலனுக்காகவும் அருந்தொண்டு ஆற்றினார்

1905 ஆம் ஆண்டின் வாக்கிலே ஐரோப்பியவை சேர்ந்த ஒன்பது மூத்த செவிலியர்கள் சேர்ந்து ஓர் அமைப்பை தோற்றுவித்தனர்,

அது செவிலியர் கண்காணிப்பாளர்கள் அமைப்பு ( The Nursing Superintendent Association) என அழைக்கப்பட்டது

1908-ஆம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற செவிலியர் கண்காணிப்பாளர்கள் முதல் ஆண்டு மாநாட்டிலே பயிற்சி பெற்ற செவிலிய அமைப்பு (Trained Nurses Association) தொடங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

பின்னர் 1909 ஆம் ஆண்டில் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் அமைப்பு (Trained Nurses Association of India) தொடங்கப்பட்டது இதன் அலுவலக பிரதிநிதிகளாக செவிலிய கண்காணிப்பாளர் அமைப்பின் பிரதிநிதிகளே இருந்து வந்தனர்

1910இல் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பின் முதல் மாநாடு பனாரஸ் இல் நடைபெற்றது அந்த மாநாட்டில் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்களின் அலுவலக பிரதிநிதிகள் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பின் கீழ்

1922 ஆம் ஆண்டு சுகாதார ஆய்வாளர் அமைப்பு
(Health Visitors’ League)

1925 ஆம் ஆண்டு துணை சுகாதார செவிலிய தாதியர் அமைப்பு (Auxiliary Nurse Midwives Association)

1929 ஆம் ஆண்டு செவிலிய மாணவர் அமைப்பு (Student Nurses Association) இணைக்கப்பட்டது

1912 இல் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் அமைப்பு உலக செவிலியர் அமைப்பின்(International Nurses Association) அங்கீகாரத்தை பெற்றது

1918 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் கராச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் தாதியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் துவங்கப்பட்டன

பயிற்சி தருவதற்காக செல்வி கீரீபின், செல்வி கிரகாம் என்ற இரு ஆங்கிலேய செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்

1926 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் செவிலியர் கல்வி மற்றும் பயிற்சி முறைகளில் அடிப்படை தரத்தை அளிப்பதற்காக முதல் பதிவுக்குழுமம் (Madras Nurses and Midwives Council) தோற்றுவிக்கப்பட்டது

1946 ஆம் ஆண்டு டெல்லியிலும் வேலுரிலும் நான்கு வருட செவிலியர் பட்ட படிப்பு முறை கொண்டு வரப்பட்டது

1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய செவிலியர் குழுமம் (Indian Nursing Council) அமைக்க அரசால் முடிவு செய்யப்பட்டு

1949 ஆம் ஆண்டு இந்திய செவிலியர் குழுமம் (INC) அமைக்கப்பட்டது

1956 ஆம் ஆண்டு செல்வி அட்ரன்வாலா என்பவர் இந்திய அரசாங்கத்தின் செவிலியர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்

1960 ஆம் ஆண்டு முதன் முதலில் முதுகலை பட்டப்படிப்பு டெல்லியில் உள்ள செவிலியர் கல்லூரியில் துவங்கப்பட்டது

1963 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் பட்டய படிப்பிற்கு பின்பான இரண்டு வருட பட்டபடிப்பு (Post Basic BSc Nursing) தொடங்கப்பட்டது

Comments

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms