தமிழ்நாட்டில் 30 படுக்கைகள் கொண்ட, 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள்


தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக ஊரகப் பகுதிகளில், சுகாதார வசதிஇல்லாத கிராமங்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதன்அடிப்படையில் 30 படுக்கைகள் கொண்ட, 20 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த, மாண்புமிகுதமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன்படி திருச்சி சுகாதார மாவட்டம், மணச்சநல்லூர் வட்டாரத்திலுள்ள சமயபுரம்;
வேலூர்சுகாதார மாவட்டம், வேலூர் வட்டாரத்தில் உள்ள கொனவட்டம், வாலாஜா வட்டாரத்தில் உள்ளசுமைதாங்கி;
கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் உள்ள பேஜிபள்ளி;
கள்ளக்குறிச்சிசுகாதார மாவட்டம், திருநாவலூர் வட்டாரத்திலுள்ள சேந்தநாடு; சின்ன சேலம் வட்டாரத்திலுள்ளஅம்மாகளத்தூர்;
நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள மதிரவேலூர்;
திருப்பூர் சுகாதார மாவட்டம், பல்லடம் வட்டாரத்திலுள்ள புளியம்பட்டி;
பெரம்பலூர் சுகாதார மாவட்டம்,பெரம்பலூர் வட்டாரத்திலுள்ள எளம்பலூர்; ஈரோடு சுகாதார மாவட்டம், பெருந்துறை வட்டாரத்திலுள்ளகாஞ்சிக்கோயில்;
நம்பியூர் வட்டாரத்திலுள்ள மளையம்பாளையம்;
திருப்பத்தூர் சுகாதார மாவட்டம்,கந்திலி வட்டாரத்திலுள்ள கோரட்டி;
சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம், வாசுதேவநல்லூர்வட்டாரத்திலுள்ள தென்மலை;
திருவள்ளுர் சுகாதார மாவட்டம், திருவள்ளூர் வட்டாரத்திலுள்ளகல்யாணகுப்பம்;
பழனி சுகாதார மாவட்டம், வேடசந்தூர் வட்டாரத்திலுள்ள கனப்பாடி; புதுக்கோட்டைசுகாதார மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்திலுள்ள ராப்பூசல்;
கரூர் சுகாதார மாவட்டம், தாந்தோணிவட்டாரத்திலுள்ள வடக்குபாளையம்; கே.பரமத்தி வட்டாரத்திலுள்ள தம்பிவாடி;
தஞ்சாவூர் சுகாதாரமாவட்டம், ஒரத்தநாடு வட்டாரத்திலுள்ள உக்கநாடு கேளையூர்;
தூத்துக்குடி சுகாதார மாவட்டம்,தூத்துக்குடி வட்டாரத்திலுள்ள லூர்தம்மாள்புரம் ஆகிய 20 இடங்களில் புதியதாக 7 கோடியே 71இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

புதியதாக ஏற்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், 2மருத்துவ அதிகாரி,1 இளநிலை உதவியாளர், 1 ஓட்டுநர், 1 மருந்தாளுநர், 1 சுகாதார செவிலியர், 1ஆய்வுக்கூட நுட்புனர்-கிரேடு III, 1 துப்புரவாளர், 1 ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் என மொத்தம் 9பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

மேலும், அனைத்து கிராமங்களுக்கும் தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில்,மருத்துவ கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள ஆரம்ப சுகாதா நிலையங்களை அனைத்து வசதிகளுடன்கூடிய 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள் ஆகிய வசதிகள் கொண்டஆரம்பர சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

இதன்படி, அறந்தாங்கி சுகாதார மாவட்டம், கரம்பகுடி வட்டாரம் மலையூரிலுள்ள ஆரம்பசுகாதார நிலையம்;
செய்யார் சுகாதார மாவட்டம், அனுக்காவூர் வட்டாரம், அக்கூரிலுள்ள ஆரம்பசுகாதார நிலையம்;
கோயம்புத்தூர் சுகாதார மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரம்,நல்லாட்டிபாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்;
ஈரோடு சுகாதார மாவட்டம், டி.என்.பாளையம்வட்டாரம், டி.என்.பாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்;
கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம்,ரிஷிவந்தியம் வட்டாரம், ரிஷிவந்தியத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்;
பழநி சுகாதார மாவட்டம்,குஜிலியாம்பாறையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்;
பூந்தமல்லி சுகாதார மாவட்டம், பூந்தமல்லியிலுள்ளஆரம்ப சுகாதார நிலையம்;
சைதாப்பேட்டை சுகாதார மாவட்டம், லத்தூர் வட்டாரம், பவன்ஜுரில் உள்ளஆரம்ப சுகாதார நிலையம்;
சேலம் சுகாதார மாவட்டம், கொங்கனாபுரத்திலுள்ள ஆரம்ப சுகாதாரநிலையம்;
பனமரத்துப்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; தாரமங்கலத்திலுள்ள ஆரம்ப சுகாதாரநிலையம்;
பி.என்.பாளையம் வட்டாரம், ஆரியபாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சிவகங்கைசுகாதார மாவட்டம், திருப்புவனம் வட்டாரம், பூவந்தியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்;
சிவகாசிசுகாதார மாவட்டம், வெம்பக்கோட்டை, கல்லமனைக்கான்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்;
தஞ்சாவூர் சுகாதார மாவட்டம், பேராவூரணி வட்டாரம், சிறுவாவிதூதியிலுள்ள ஆரம்ப சுகாதாரநிலையம்;
சேதுபவசத்திரம் வட்டாரம், அழகியநாயகிபுரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்;
திருவள்ளூர் சுகாதார மாவட்டம், புழல் வட்டாரம், நர்வாரிகுப்பத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்,
வில்லிவாக்கம் வட்டாரம், போரூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பத்தூர் சுகாதார மாவட்டம்,கண்டிலி வட்டாரம், குனிச்சியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்;
காட்பாடி வட்டாரம், திருவலத்திலுள்ளஆரம்ப சுகாதார நிலையம்;
திருப்பூர் சுகாதார மாவட்டம், குடிமங்கலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்;
திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், புதுபாளையம் வட்டாரம், காரப்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதாரநிலையம்;
உதகமண்டலம் சுகாதார மாவட்டம், கூடலூர் வட்டாரம், நெல்லக்கோட்டையிலுள்ள ஆரம்பசுகாதார நிலையம்;
விழுப்புரம் சுகாதார மாவட்டம், வல்லம் வட்டாரம், மேல்சிதாமூரிலுள்ள ஆரம்பசுகாதார நிலையம் என மொத்தம் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 22 கோடியே 55 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு, தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கும் கூடுதலாக 3 மருத்துவ அதிகாரிகள், 1 செவிலியர், 1 ரேடியோகிராபர், 1 ஒட்டுநர், 1துப்புரவுப் பணியாளர், 1 ஆரம்ப சுகாதார நிலைய ஆண் பணியாளர், 1 ஆரம்ப சுகாதார நிலைய பெண்பணியாளர், ஆக மொத்தம் 9 பணியிடங்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலமும், தற்போதுள்ளஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதன் மூலமும், கிராமப் புறங்களில் வாழும் மக்கள்தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே நவீன மருத்துவ வசதிகளைப் பெற்று நோயற்ற வாழ்வு வாழவழிவகுக்கும்.

Post a Comment

Previous Post Next Post