செவிலியர்களின் அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள்
அரசியலமைப்பின் மூன்றாம் பகுதி அடிப்படை உரிமைகள் ஆகும்.

மக்களால் அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மக்களின் உரிமைகளையும், சுதந்திரங்களையும் காப்பாற்ற அடிப்படை உரிமைகள் அவசியமானவை ஆகும்.

அடிப்படை உரிமைகள் அரசின் ஆணைகள் மற்றும் நடவடிக்கைகளின் எல்லைகள் ஆகும்.

இந்த உரிமைகள் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமைகள் ஆகும். அனைவருக்கும் பொருந்தும்.

அரசின் அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பை விட சட்டத்தின் அரசை அமைப்பதே அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்போடு சேர்த்ததன் நோக்கமாகும்.

இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள்

1. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு(பிரிவு-14)

2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம்(பிரிவு-15)

3. பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு(பிரிவு-16)

4. தீண்டாமை ஒழிப்பு(பிரிவு-17)

5. பட்டங்கள் ஒழிப்பு(பிரிவு-18)

6. ஏழு சுதந்திரங்கள்(பிரிவு-19 முதல் 22)

7. சமய உரிமை(பிரிவு 25-28)

8. கல்வி உரிமை(பிரிவு 29)

9. இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32) ஆகும்

இதில் ஏழு சுதந்திர உரிமைகளைப்பற்றி இங்கு காண்போம்.

சுதந்திர உரிமைகள்


இவை ஜனநாயக உரிமைகள் எனப்படும் (விதி 19)

1. பேச்சுரிமை, கருத்தை வெளியிடும் உரிமை, மற்றும் பத்திரிக்கை சுதந்திரம்.

2. அமைதியாக ஆயுதங்கள் இல்லாமல் கூடும் உரிமை.

3. சங்கம் அல்லது குழுக்களை உருவாக்கும் உரிமை.

4.இந்திய பிரதேசத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானலும் போகும் உரிமை.

5. இந்திய பிரதேசத்தின் எப்பகுதியில் வேண்டுமானலும் வசிக்கும் அல்லது குடியேறும் உரிமை.

6.சொத்துரிமை (44 வது திருத்தச் சட்டம் 1978 ஆல் இந்த உரிமை நீக்கப்பட்டு விதி 300 - A க்கு மாற்றப்பட்டது, இது தற்போது அடிப்படை உரிமை இல்லை)

7. எந்த வித வேலை, வியாபாரம் மற்றும் தொழில் நடத்தும் உரிமை.

(இந்த சுதந்திரங்கள் நாட்டின் பாதுகாப்பு, அயல்நாடுகளுடன் நட்புறவு, பொது ஒழுங்கு, மரியாதை, ஒழுக்க முறை, நீதிமன்ற அவமதிப்பு, அபராதம் ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான நிபந்தனைகளை அரசு விதிக்க முடியும்)

மேலும் இந்த அடிப்படை உரிமைகளை தடை செய்து வெளிவரும், சட்டம், அரசாணை ஆகியவை செல்லாது என அறிவிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு (பிரிவு 13)


இது போல இந்த அடிப்படை உரிமைகளை மறுக்கும் தனிமனிதன், அரசு, அமைப்பு, சங்கம் ஆகியவற்றிற்கு எதிராக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை உள்ளது. (பிரிவு 32)


எனவே தனிமனிதரின் அடிப்படை உரிமைகளை தடை செய்ய எந்த தனிமனிதராலோ, அமைப்பாலோ, சங்கங்களாலோ இயலாது.
Tamilnadu Nurse



தமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

Post a Comment

Previous Post Next Post