மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வந்தவர் திரு. கே. கார்த்திகேயன், 1993 - 1996 இல் செவிலிய பயிற்சி பெற்றவர். இவர் இன்று (23-10-2012) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் அகால மரணமடைந்தார். இரவு பணி புரிந்து வந்த செவிலியர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், வாந்தி இருந்து வந்துள்ளது. மிகவும் உடல் நிலை சரி இல்லாத நிலையில் விடுப்பு எடுக்க இருந்தவருக்கு. டெங்கு நோய் பரவுவதாலும், அரசு மருத்துவமனைக்கு அடிக்கடி அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வதாலும் செவிலியர்கள் யாரும் எவ்வித விடுப்பும் எடுக்க கூடாது என அலுவலக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இவருக்கும் இரவு பணியில் இருப்பதால் விடுப்பு எடுக்க கூடாது என கூறப்பட்டு உள்ளது. 22-10-2012 அன்று இரவு பணிக்கு வந்த செவிலியர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மிகவும் உடல் நிலை சரி இல்லாத நிலையில் 22-10-2012 அன்று ஆய்வுக்கு வந்த இணை இயக்குனர் அவர்களிடம் தனது நிலையை விளக்கி கூறி மருத்துவ விடுப்பு வழங்க கேட்டு உள்ளார். இணை இயக்குனரின் அனுதாபத்திற்கு பிறகு அவருக்கு விடுப்பு வழங்க அனுமதிக்கப்பட்டு