Skip to main content

Posts

Showing posts from December, 2013

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின் செய்திமடல் வெளியீடு

செய்திமடலுடன் இடமிருந்து, கதிர், உமாபதி, கலைச்செல்வி( வேலூர் மாவட்ட செயலாளர், ஒப்பந்த செவிலியர்கள் சங்கம்) அருண், கிருஷ்ணகுமார், கண்ணன் ஆகியோர். அரசு மருத்துவமனையின் முதுகெலும்பாய் உள்ள செவிலியர்களுக்கு, பயனுள்ள தகவல்களையும், நடப்பு நிகழ்வுகளை அளிக்க எடுக்கப்பட்டுள்ள ஒரு முயற்சி இந்த தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின் செய்திமடல், அச்சிடப்பட்ட செய்திமடலாய் வெளியிட எண்ணம் இருந்த போதிலும், பொருளாதாரம், அரசு பதிவு, அச்சு போன்ற காரணங்களால் இப்போது மின்னிதழாய் வெளியிட்டு உள்ளோம். செவிலிய துறை மற்ற தோழமை துறை நல்ல உள்ளங்களின் உதவியோடு விரைவில் மாத இதழாய் வெளியிடுவோம். நன்றிகளுடன் உமாபதி