Income Tax Related Tips


TAX TIPS
CALCULATE YOUR ”IT” EARLIER:-
அக்டோபர் மாதத்தில் தமிழக அரசு, அகவிலைப்படியை  (D.A.) அறிவித்துவிடும் எனவே அப்போதே INCOME TAX ஐ கணக்கீடு செய்து, வரும் வரியை நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களில் வங்கியில் செலுத்தினால், வருமான வரி கட்ட வேண்டுமே என்ற சுமை குறையும்.

தற்போது வருமான வரியை ஆன்லைனில் செலுத்தும் வசதி உள்ளதால் வங்கிக்கு சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.

PUBLIC PROVIDENT FUND:-
PPF ஆனது சிறந்த சேமிப்பு மற்றும் வரிசலுகை வழங்கும் திட்டம் ஆகும், இதற்கு ஆன்லைனிலே விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. PPF ற்கு முதலில் தொடங்கும் பிரிமியம் மட்டுமே கடைசி வரை கட்ட முடியும் எனவே அதிக தொகையாக செலுத்தி தொடங்கவும், ஒரு FINANCIAL YEAR ல் 12 தவணையாக எவ்வளவு தொகை வேண்டுமானலும் செலுத்தலாம், இதில் கடன் பெறும் வசதியும் உள்ளது.

YOUR ”IT” NOT GOING TO YOUR PAN:-
ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருமான வரி PAN NUMBER ல் சேர்வதில்லை என கூறப்படுகிறது. எனவே உங்கள் வருமான வரியை வங்கியில் செலுத்தினால் நேரடியாக PAN NUMBER ல் பதிவு ஆகும், RETURN தாக்கல் செய்தால் சரியான வருமான வரி செலுத்தியது தெரிய வரும்.

KNOW THE DEDUCTION OFFERED:-
நீங்கள் வாங்கிய INCOME TAX FORM ல் என்னென்ன வரி சலுகைகள் உள்ளன என அறிந்து கொள்ளுங்கள், அது தொடர்பாக GOOGLEல் தேடி அதற்கேற்றவாறு INVESTMENT தேர்வு செய்யலாம்.

CPS:-
CPSல் நீங்கள் செலுத்தும் தொகை 80 C ன் கீழும், அரசு செலுத்தும் தொகை 80CCD ன் கீழும் வரி சலுகை பெற தகுதி வாய்ந்தது.

NHIS:-
NHISல் நீங்கள் செலுத்தும் தொகை ரூ. 150/-ஆனது 80 Dன் (Not 80C)  கீழ் வரி சலுகை பெற தகுதி வாய்ந்தது.

FORM 16:-
வருமான வரி தாக்கல் செய்த பிறகு உங்கள் அலுவலகத்தில் இருந்து FORM 16 (TRACE VALID) பெற்று வைத்து கொள்ளவும்.
கடன் பெற இது உதவியாக இருக்கும்.


மேலும் ஏதேனும் தகவல் தங்களுக்கு தெரிந்தால் COMMENT செய்யவும். மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

2 Comments

  1. Tution fees( self as well as childrens) also tax exemption under 80C

    ReplyDelete
  2. Anybody want to file IT return pls contact 7094387152.
    100% refund guarantee for personnel in cps scheme.

    ReplyDelete
Previous Post Next Post