தொழில்வரி செலுத்துவது தொடர்பாக அனைவருக்கு உள்ள சந்தேகங்களை தொகுத்து எளிய தமிழில் கோயம்பத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு அதன் விவரம் தரப்பட்டுள்ளது. Click Here for கோயாம்பத்தூர் மாநகராட்சியின் FAQ Document? மேலும் பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் தொழில்வரி தொழில் விகிதங்கள் கடைசியாக தரப்பட்டுள்ளது. 1) மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்த தகுதியானவர்கள் யார் யார்? மாதாந்திர ஊதியமாக ரூ. 3,500 /- க்கு மேல் அதாவது 6 மாத வருமானமாக ரூ. 21,000/ -க்கு மேல் பெறப்படும் அனைத்து தனிநபர் மற்றும் நிறுவனங்கள். 2) நிறுவனத்திற்கு தனியாக தொழில்வரி செலுத்தப்பட வேண்டுமா? ஆம். 6 மாத வருமானமாக ரூ. 21,000/ -க்கு மேல் ஈட்டக்கூடிய நிறுவனங்கள் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தப்பட வேண்டும். 3) தொழில்வரி செலுத்துவதிலிருந்து யார் யாருக்கு விலக்கு உள்ளது ? கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 169 ன்படி, i. முப்படைகளில் தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலர்கள், ii. மாற்றுத்திறனாளிகள், iii. மத்திய பாதுகாப்பு காவல் (CRPF) துறையில் பணிபு