Skip to main content

Posts

Showing posts from January, 2011

கணிப்பொறி வாங்கிட முன்பணம்

கணிப்பொறி வாங்கிட முன்பணம் (அரசு ஆணை எண் 231, நிதித்துறை நாள் 1.4.1992) 01.  அலுவலகத் தலைவர் சான்றளிக்கும் இனங்களில் ரூ 6,500/- ம் அதற்கு மேலும் அடிப்படை சம்பளம் வாங்கும் அலுவலருக்கு கணிப்பொறி வாங்கிட முன்பணம் ஒப்பளிக்கலாம் (அ.ஆ.எண் 498, நிதித்துறை நாள் 20.09.2004) 02.  கணிப்பொறி வாங்க முன்பணம் ரூ 50,000 அல்லது கணிப்பொறியின் விலை இதில் எது குறைந்ததோ அத்தொகையை முன்பணமாக வழங்கலாம் (அ.ஆ.எண்.59, நிதி, நாள் 16.01.2006) 03.  இம் முன்பணத்திற்கு வட்டி வீதம் 10% (அ.ஆ.எண் 94, நிதி துறை , நாள் 14.03.2008)

தொழிற்சங்க இலக்கணம்

தொழிலாளர் இயக்கம் பத்தாயிரம் முறை விழும்; எழும்; வடுபடும்; மீண்டும் எழும்; அதன் குரல்வளை இருக்கப்படும்! உணர்வற்று போகும்வரை ! தொண்டை அடைக்கப்படும்! நீதிமன்றம் கேள்விக்கணைகளைத் தொடுக்கும் குண்டர்களால் தாக்கப்படும்! பத்திரிக்கைகளால் வசை பாடப்படும் பொது மக்களின் புருவ நெரிப்பும்கூட போர் தொடுக்கும்; அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்! ஒடுகாளிகளால் மறுப்புரைகள் கூறப்படும்! சூதாடிகளால் பலி கொடுக்கப்படும் ! உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்! கொலைகளால் நடு வீதியில் விடப்படும் ! துரோகிகளால் வஞ்சிக்கப்படும்! அட்டைகளால் உறிஞ்சப்படும்! தலைவர்களால் கூட விற்று விடப்படும் ! ஓ ...................... இவ்வளவு சோதனைகள் இருந்தாலும் இந்த வையகம் இதுவரை கண்டிராத உன்னத சக்தி வாய்ந்தது உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றுதான்! ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருக்கும் பாட்டளிகளை விடுதலை செய்வதே வரலாற்றுக் கடமையாகும். இதன் வெற்றி சர்வ நிச்சயம் ___________________________________________________________________ 1904 ஆம் ஆண்டு தி மெட்டல் ஒர்க்கர் பத்திரிக்கையில் ஈகிள்ஸ் ஸ்டெப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது _

செவிலியருக்கான ஒழுக்க நெறிகள்: (Code of Ethics)

செவிலியரின் ஒழுக்க நெறிகள் 1953 ஆண்டு ஜூலை திங்கள் 10ஆம் நாள், பிரேசிலில் உள்ள சாஓ பவுலோ என்னுமிடத்தில், சர்வ தேச செவிலியர் குழுமத்தால் ஏற்படுத்தப்பட்டு மீண்டும் 1964 இல் திருத்தம் செய்யப்பட்டது 1. செவிலியர்கள் நோயாளிகளுக்கு சமூக, பொருளாதார, தனிநபர் பேதமின்றியும், நோய்த் தன்மையை மனதில் கொள்ளாமலும் ஒரு மனிதனுக்குரிய மரியாதையோடு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் 2. செவிலியரின் அடிப்படைக் கடமைகள் என்பவை மக்களின் உயிரைக் காப்பது, அவர்களின் வேதனைகளைக் குறைப்பது அல்லது நீக்குவது மற்றும் அவர்களின் உடல் நலம் முன்னேற்றமடைய உதவுவது ஆகியவைகயாகும் 3. செவிலியர்கள் எப்பொழுதும் மேம்பட்ட செவிலியப் பணியை அளிக்க வேண்டும். அது போல் நன்னடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும் 4. செவிலியர்கள் வெறும் பயிற்சி மட்டுமின்றி, தகுந்த அறிவும் திறமையும் கொண்டு பணிபுரிய வேண்டும், அவற்றை நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள வேண்டும் 5. நோயாளிகளின் மத நம்பிக்கைகள் மதிக்கப் பட வேண்டும் 6. செவிலியர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட தனிப்பட்ட நபர்களின் தகவல்களை அவசியமின்றி மற்றவர்களுக்கு வெளியிடக் கூடாது 7. செவிலியர்கள் தமது கடமைகளை