Skip to main content

Posts

Showing posts from September, 2011

சுகாதாரத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம் பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு 2011 - 2012  கோரிக்கை எண். 19 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை டாக்டர். வி.எஸ். விஜய் மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை அமைச்சர்  Health Family Welfare Policy Note 2011 -2012 Error: Embedded data could not be displayed.       நன்றி: பொதுசுகாதாரம் இன்று

மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன

மருத்துவம் சார்ந்த 24 வகையான டிப்ளமோ - சான்றிதழ் படிப்புகள் 12.9.2011 முதல் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க 26 - ந்தேதி கடைசி நாள்  தமிழக மருத்துவ கல்வி இயக்குநகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் பிளஸ் - 2 தேர்வில் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 24 வகையான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும், எஸ்,எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவி செவிலியர் பயிற்சி ஆகியவற்றில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாட்டில் உள்ள 15 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் கிண்டியில் உள்ள கிங் நிலையத்திலும் 12.09.2011 முதல் 26.9.2011 பகல் 12 மணி வரை வழங்கப்படும், சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் சான்றிதழ் படிப்புகள் உள்ளன.  ஆய்வகம், ரத்தம், டயாலிசஸ், முட நீக்கவியல், அறுவை அரங்கம், மயக்க மருந்து உதவியாளர், ஆகியவற்றில் பணிபுரிய ஏதுவான படிப்புகள்,  மருத்துவப்பதிவேடு நுட்பனர், செவிலியர் உதவியாளர் உள்பட 23 வக

சட்ட மன்றத்தில் சுகாதாரத்துறை அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை –10.9.2011 முன்னுரை:- மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழியை கருத்தில் கொண்டு,இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறுமுன்னோடித் திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த மாமன்றஉறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.              நோயை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது இயலாத ஒன்றுஆகும். எனவே தான், நோய் ஏற்படும் போது, அந்த நோயை நீக்குவதற்கான மருத்துவவசதிகளை மக்களுக்கு அளித்து, அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்ற உயரியஇலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எனதுதலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.           அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் சில புதியதிட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் நான் தற்போது எடுத்துரைக்க விழைகிறேன். 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும்செயல்படும்:- தற்போது மாநிலத்தில் உள்ள 1,589 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,53

பட்ட செவிலியர் படிப்பிற்கான தகுதி பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன Post Basic Nursing Merit List and Counseling Schedule Announced

பட்டய படிப்பு முடித்து பட்ட படிப்பு படிப்பதற்கான விண்ணப்பதாரர்களில் தகுதியுடைவர்களின் பெயர்பட்டியல் மற்றும் பட்ட படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நாட்கள் தமிழ்நாடு சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது பட்டய படிப்பு முடித்த செவிலியர்கள் (Diploma Nursing) , பட்ட படிப்பு படிப்பதற்கான (Post Basic BSc Nursing) , அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களை நிறப்புவதற்கான கலந்தாய்வுகள் வரும் 15.09.2011 முதல் துவங்குகின்றன, கலந்தாய்வுகளில் பங்குபெற உள்ளவர்களின் தகுதி பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. PROVISIONAL MERIT LIST FOR POST BASIC B.Sc (NURSING) COURSE 2011 - 2012 SESSION தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அனைத்து உண்மை சாண்றிதழ்களுடன் கீழ்காணும் அட்டவணைப்படி தகுதியான நாள் மற்றும் நேரத்தில் கலந்தாய்வுகளில் கலந்து கொள்ளலாம் என இணையதளத்தில் தெரிவித்து உள்ளனர் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு நடைபெறும் நாளில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கலந்தாய்வு கூடத்தில் இர

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணியிட நேர் முக தேர்விற்கு தகுதியானவர்களின் பெயர்பட்டியல்

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணியிடத்திற்கு நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்று நேர் முக தேர்விற்கு தகுதியானவர்களின் பெயர்பட்டியல் www.aiimsexams.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது,  தேர்வு எழுதிய தமிழக செவிலியர்கள் தங்களுடைய நிலையை www.aiimsexams.org என்ற இணைய தளம் சென்று பார்த்து அறிந்து கொள்ளவும்  நேர்முக தேர்வுகள் 26 - 09 -2011 முதல் 1 -10 -2011 வரை நடைபெறும்,  நேர்முக தேர்விற்கான அழைப்பு கடிதம் அவர்களின் இணையதளத்தில் ( www.aiimsexams.org ) விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என கூறி உள்ளனர்  நன்றி: திரு. கார்த்திக் அவர்கள் செவிலியர்    Tags: AIIMS,Aiimsexmas.Org, Aiims Result, Aiims Result 2011, Aiims.Ac.In, Aiims Delhi,Aiims Admit Card 2011, Aiims Nurse, Aiims Nurse Vacancy, Aiims Nurses Exam,Aiims Nurse Vacancy 2011, Aiims Exam For Staff Nurse, Aiims Exam For Nurses,