1 திட்டத்தின் பெயர்:- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். 2 திட்டத்தின் நோக்கங்கள் :- ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும். 3 வழங்கப்படும் உதவி:- திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். 4 பயன் பெறுபவர்கள்:- ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம். 5 தகுதிகள் / நிபந்தனைகள்:- அ) கல்வித் தகுதி திட்டம் 1 1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) . 2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும். 3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும். திட்டம் 2 1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அ