பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக சுயநினைவின்றி (கோமா) மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் அருணா ஷான்பாக் திங்கள்கிழமை மரணமடைந்தார். மும்பையில் உள்ள KEM மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் அருணா ஷான்பாக். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு மருத்துவமனையின் வார்டு உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் KEM மருத்துவமனையில் இருந்த அவர் திங்கள்கிழமை மரணமடைந்தார். ஆளுநர் இரங்கல்: அருணாவின் மரணம் குறித்து மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: "அருணாவின் இழப்பு, நம் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது; மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைந்த பிரார்த்திக்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் இரங்கல்: மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தன் சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தி: "அருணாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அவர் அவதியுற்றதைப் பார்த்தபோது என் மன